இந்தியாவில் முதல்முறையாக 16 விதமான காய்கறிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணையித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த திட்டம் வரும் நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
கேரளா அரசின் சூப்பர் திட்டம்
இன்றை சூழ்நிலையில் விவசாயிகள் தங்கள் உற்பத்தி விளைபொருட்களுக்கு போதிய விலை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்களின் நலனை கருத்தில் கொண்டு, இந்தியாவிலேயே முதல்முறையாக காய்கறிகளுக்கு (Msp for 16 Vegetables) ஆதார விலை (Minimum Support prise) நிர்ணையித்து கேரளா கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்த திட்டத்தின் கீழ், காய்கறிகளின் சந்தை விலை சரிவை சந்தித்தாலும், விவசாயிகளிடம் இருந்து அடிப்படை விலையை வைத்தே காய்கறிகள் கொள்முதல் செய்யப்படும்.
16 வகை காய்கறிகள்
வெள்ளைப்பூண்டு, அன்னாசி பழம், உருளைக்கிழங்கு, வெண்டைக்காய், வெள்ளரிக்காய், பீன்ஸ், நேந்திரம் பழம், தக்காளி, கேரட், பாகற்காய், புடலங்காய், முட்டைகோஸ், பீட்ரூட், மரச்சீனி கிழங்கு, பட்டாணி, பூசணிக்காய் ஆகிய 16 காய்கறி, பழங்களுக்கு குறைந்தபட்ச விலையை கேரள அரசு நிர்ணயித்துள்ளது.
உற்பத்தி செலவை விட ஆதார விலை 20% அதிகம் இருக்கும் வகையில் நிர்ணையிக்கப்பட்டுள்ளது. இதனால் மார்கெட்டில் காய்கறிகளின் விலை குறைந்தாலும் அரசு நிர்ணையித்த விலை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.
விதிமுறைகள்
-
அதிகபட்சமாக ஒரு விவசாயி ஒரு சீஸனில் 15 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யும் காய்கறிகளை, விற்பனை செய்யும் விதத்தில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
-
தங்கள் விவசாய நிலத்தை காப்பீடு செய்து பின் விவசாயத்துறையில் பெயர் பதிவு செய்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற முடியும்.
இந்தியாவில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த திட்டம் கேரளாவில் வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
மேலும் படிக்க...
தமிழகத்தில் 59 அணைகள் உட்பட 736 அணைகள் புனரமைப்பு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!
தீபாவளி நற்செய்தி : ஜன் தன் வங்கி கணக்கில் மீண்டும் ரூ.1500 செலுத்த மத்திய அரசு முடிவு!
தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை, சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு!!