பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 27 August, 2021 8:04 AM IST

மதுரை மாவட்ட விவசாயிகள், மக்காச்சோளம், துவரை, நிலக்கடலை, பருத்தி, சோளம், கம்பு ஆகியப் பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்துகொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

பயிர் காப்பீட்டுத் திட்டம் (Crop Insurance Scheme)

திருந்திய பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் நடப்பு ஆண்டு காரீப் பருவத்திற்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத் திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் பிர்க்கா அளவில் நெல், பாசிப்பயறு, உளுந்து தவிர பிற பயிர்களான மக்காச்சோளம், துவரை, நிலக்கடலை, பருத்தி, சோளம் மற்றும் கம்பு ஆகிய பயிர் களுக்கு பயிர் காப்பீடு செய்துகொள்ள வழிவகை உள்ளது.

தகுதி (Qualification)

அறிவிக்கை செய்யப்பட்ட பிர்காக்களில் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களைப் பயிரிடும் நில உரிமையாளர், குத்தகை விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளும் திட்டத்தில் சேர தகுதியானவர்கள்.

பயிர்க்கடன் பெறும் விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தில் அவரது சுய விருப்பத்தின் அடிப்படையில் கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

பிரீமியத்தொகை (Premium)

அனைத்து விவசாயிகளுக்கும் ஒரே விதமான பயிர் காப்பீட்டுத் தொகை, பிரீமியத்தொகை தான். அனைத்து விவசாயிகளுக்கும் அதற்கான மானியத் தொகை கிடைக்கும்.

 காப்பீடு செய்வது எப்படி? (How to insure?)

மேலும், விவசாயிகள் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் இணைய அருகில் உள்ள பொது சேவை மையங்கள், தேசிய வங்கி கிளைகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யலாம்.

தேவைப்படும் ஆவணங்கள் (Documents required)

  • அடங்கல் பதிவு

  • வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகல்

  • ஆதார் அட்டை நகல்

விவசாயிகள் தாங்கள் பயிர் சாகுபடி செய்ததை கிராம நிர்வாக அலுவலரிடம் அடங்கலில் பதிவு செய்யப்பட்டதை உறுதிப் படுத்தி கொள்ளவும்.
முன்மொழிவு படிவம், பதிவு விண்ணப்ப படிவம், கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ) வழங்கும் அசல் அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகல், ஆதார் அட்டை நகல் போன்றவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

பயிர்கள் (Crops)

பயிர் காப்பீடு செய்ய பிரிமியத்தொகை ஏக்கர் ஒன்றுக்கு மக்காச்சோளத்திற்கு ரூ.495/-, துவரைக்கு ரூ.341.90/-, நிலக்கடலைக்கு ரூ.475/-, பருத்திக்கு ரூ.400.87/-, சோளத்திற்கு ரூ.243/-, கம்பு பயிருக்கு ரூ.251/- செலுத்த வேண்டும்.

எனவே விவசாயிகள் அனைவரும் மேற்கூறியப் பயிர்களுக்கு வரும் 31க்குள் காப்பீடு செய்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தகவல்
எஸ்.அனிஷ்சேகர்
மதுரை மாவட்ட ஆட்சியர்

மேலும் படிக்க...

பி.எம் கிசான் திட்டத்தின் 9-வது தவணை எப்போது? முழு விவரம் உள்ளே!!

English Summary: Khariff Season Cultivation- Call for Crop Insurance!
Published on: 27 August 2021, 07:59 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now