பி.எம் கிசான் திட்டத்தின் 9-வது தவணை எப்போது? முழு விவரம் உள்ளே!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் 9-வது தவணை விரைவில் வழங்கப்படவுள்ளது.

பி.எம் கிசான் திட்டம்

பி. எம் கிசான் நிதி திட்டம் என்பது மத்திய அரசின் 100 சதவீத நிதியுதவி திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ், 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மூன்று தவணைகளில் ஆண்டுக்கு 6,000 வருமான உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்குத் தகுதியான விவசாய குடும்பங்களை மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் அடையாளம் கண்டு, பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகப் பணம் வரவு வைக்கப்படுகிறது.

10 கோடி விவசாயிகள் பயன்

இதற்கான முதல் தவணை ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரையும், இரண்டாவது தவணை ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30 வரையும் மூன்றாவது தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரை வழங்கப்படுகிறது.

இதுவரை பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனாவின் கீழ், நாட்டில் 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ .1, 37,192 கோடி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார். மேலும் பிரதமர் கிசானின் 9 வது தவணையை விடுவிப்பதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் தொடங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.

9வது தவணை எப்போது?

மத்திய அரசின் தரவுகளின் அடிப்படையில், வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பி.எம் கிசான் திட்டத்தின் 9 வது தவணை விவசாயிகள் கணக்கில் செலுத்துவதற்கான பணிகளை அரசு தொடங்கும். எனவே, நீங்கள் இந்த திட்டத்திற்கு இன்னும் பதிவு செய்யவில்லை என்றால், இப்போது பதிவு செய்திடுங்கள் . இந்த மாத இறுதிக்குள் பதிவுசெய்து விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டால், அந்த விவசாயி ஒரே நேரத்தில் இரண்டு தவணைகளையும் ஒன்றாகப் பெற முடியும்.

பி.எம் கிசான் திட்டத்தில் பதிவு செய்வது எப்படி?

  • முதலில், நீங்கள் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.pmkisan.gov.in ஐப் பார்வையிட வேண்டும்

  • அதில் Farmers corner என்பதை கிளிக் செய்யுங்கள்

  • பின்னர், New Farmer Registration என்பதை கிளிக் செய்யுங்கள்

  • பின், ஆதார் அட்டையின் விவரங்களை நிரப்பி continue என்பதைக் கிளிக் செய்க

  • இதன் பின் மற்றொரு பக்கம் திறக்கும், அதில் நீங்கள் ஏற்கனவே பதிவு செய்திருந்தால் உங்கள் விவரங்கள் தோன்றும். நீங்கள் முதல் முறையாக பதிவு செய்கிறீர்கள் என்றால், Record not found with given details, do you want to register on PM-KISAN Portal என கொடுக்கப்பட்ட விவரங்களுடன் பதிவு செய்ய விரும்புகீறீர்காள என தோன்றும்.

  • அதற்கு Yes and proceed என்பதைக் கிளிக் செய்யவும்.

  • பின் ஒரு படிவம் தோன்றும், அதில் கேட்கப்படும் தகவல்களை சரியாக நிரப்பி சேமிக்கவும்.

  • பின்னர், உங்கள் நிலத்தின் விவரங்கள் கேட்கப்படும்.

  • சரியான தகவலை நிரப்பி சேமிக்கவும்.

  • இதன் பின் பதிவு செயல்முறை முடிவுபெறும்.

  • பதிவு செய்த பின் உங்ளுக்கு ஒரு பதிவு எண் மற்றும் குறிப்பு எண் வழங்கப்படும் அவற்றை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.

மேலும் படிக்க.... 

நிலையான வருமானம் தரும் மண்புழு உரம்! தயாரிப்பது எப்படி?

விரைவில் நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!!

English Summary: When is PM Kisan 9th installment gets relesed? Full details inside!! Published on: 18 June 2021, 12:27 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.