எல்லா விவசாயிகளுக்கும் கிசான் கிரெடிட் அட்டைகளை வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கிசான் கிரெடிட் அட்டை
விவசாயிகள் தங்களது பணத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கிசான் கிரெடிட் கார்டு திட்டம் (Kisan credit card) திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கிசான் கிரெடிட் கார்டை அவைத்து அவர்கள் தங்களது பணத் தேவைகளை பூர்த்தி செய்யலாம்.
குறைந்த வட்டி
கிசான் கிரெடிட் கார்டு வாயிலாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன்களுக்கு குறைந்த வட்டி விதிக்கப்படுவது மட்டுமல்லாமல், வட்டி மானியமும் அரசிடம் இருந்து கிடைக்கிறது. வர்த்தக வங்கிகள், மண்டல ஊரக வங்கிகள், சிறு நிதி வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் வாயிலாக விவசாயிகள் கிசான் கிரெடிட் கார்டு பெற முடியும்.
அனைத்து விவசாயிகளுக்கும்
இந்நிலையில், நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் கிசான் கிரெடிட் கார்டு வழங்கும்படி வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. வங்கி துறை செயலாளர் விவேக் ஜோஷி தலைமையில் அனைத்து பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுடன் வங்கித்துறை குறித்த விரிவான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அறிவுறுத்தல்
இந்த கூட்டத்தின்போது, நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் கிசான் கிரெடிட் கார்டு வழங்கும்படி பொத் துறை வங்கிகளின் தலைவர்களுக்கு விவேக் ஜோஷி அறிவுறுத்தியுள்ளார். இதற்காக பிஎம் கிசான் தகவல் தளத்தை பயன்படுத்திக்கொள்ளும்படியும் அவர் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிரெடிட் கார்டு திட்டம்
கிசான் கிரெடிட் கார்டு திட்டம் 1998ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்டது. விவசாயிகள் தங்கள் வேளாண் தொழிலுக்கு தேவையான விதைகள், உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவற்றை வாங்குவதற்கு பணத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கிசான் கிரெடிட் கார்டு திட்டம் கொண்டுவரப்பட்டது.
கடன் அட்டை
பயிர் சாகுபடிக்கு தேவைகளை பூர்த்தி செய்துகொள்வது, அறுவடைக்கு பிந்தைய செலவுகளை சமாளிப்பது, உற்பத்தி சந்தைப்படுத்துதல் கடன், விவசாய குடும்ப தேவைகளை பூர்த்தி செய்துகொள்வது, வேளாண் சொத்துகள் பராமரிப்பு மற்றும் வேளாண் சார்ந்த பணிகள், வேளாண் முதலீட்டு கடன் போன்ற விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க…
ரயில்வே தண்டவாளத்தில் தள்ளிவிடப்பட்ட 3வயது குழந்தை - அமெரிக்காவில் கொடூரம்!
அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 38%மாக உயர்வு-தமிழக அரசு அறிவிப்பு!