1. விவசாய தகவல்கள்

விவசாயிகளின் பிஎம் கிசான் நிதி ரூ.8,000 மாக உயர்வு – அடுத்த வாரம் வெளியாகிறது அறிவிப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

மத்திய அரசின் பிரமரின் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் தொகை ரூ.8,000 மாக அதிகரிக்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் மத்திய அரசின் பட்ஜெட்டில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய பட்ஜெட்

மத்தியில் ஆளும் பிரமதர் மோடி தலைமையிலான அரசின் பொது பட்ஜெட் ஆண்டுதோறும் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அதன்படி 2023-24ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.

ரூ.22,000 கோடி

இந்நிலையில் விவசாயிகளின் முக்கியமான கோரிக்கையான பிஎம் கிசான் நிதி உயர்த்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனிடையே ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் பிஎம் கிசான் நிதியை ரூ.6,ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாக உயர்த்த மத்திய அரசு  திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ.22,000 கோடி செலவாகும் என தெரிகிறது.

 13-வது தவணை

பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் 2,000 ரூபாய் நிதியுதவியின் 13-வது தவணை இந்த வாரம்  விடுவிக்கப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரூ.6,000

விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதற்காக 2019ஆம் ஆண்டில் பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டம் (PM Kisan Samman Nidhi Yojana) அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா 6000 ரூபாய் வழங்கப்படுகிறது. காலாண்டுக்கு ஒருமுறை 2000 ரூபாய் விவசாயிகளுக்கு அனுப்பிவைக்கப்படும்.

12ஆவது தவணை

ஏற்கெனவே 11 தவணைகள் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் பணம் அனுப்பப்பட்டுவிட்டது. இந்நிலையில், 12-வது தவணைத் தொகையைக் கடந்த அக்டோபர் மாதம்   பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார்.சுமார் 11 கோடி தகுதியுள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் பணம் 16000 கோடி ரூபாய் செலுத்தப்பட்டது.

இதன்படி, 11 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாக 2000 ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டது.கடந்த ஆண்டு இந்தத் தொகை ஜனவரி மாதம் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

ரயில்வே தண்டவாளத்தில் தள்ளிவிடப்பட்ட 3வயது குழந்தை - அமெரிக்காவில் கொடூரம்!

அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 38%மாக உயர்வு-தமிழக அரசு அறிவிப்பு!

 

English Summary: Farmers' PM Kisan Fund to be hiked to Rs 8,000 - Notification to be released next week Published on: 24 January 2023, 10:46 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2023 Krishi Jagran Media Group. All Rights Reserved.