பழம் மற்றும் காய்கறி தள்ளுவண்டிக்கான மானியத்தை (Subsidy) பெறும் உத்தேச பயனாளிகள் பட்டியலை புதுச்சேரி அரசு (Puducherry Government) வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக புதுச்சேரி அரசின் வேளாண் கூடுதல் இயக்குநர் வேதாசலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
காய்கறி மற்றும் பழ வியாபாரிகளின் நலனைக் கருத்தில்கொண்டு புதுவை அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, தோட்டக்கலை அலுவலகம் மற்றும் மாநில தோட்டக்கலை வளர்ச்சி சங்கம் வாயிலாக தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் பழம் மற்றும் காய்கறி தள்ளுவண்டி பெறுவதற்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
உத்தேசப் பட்டியல் (Proposed list)
நடப்பாண்டில் (2020-21) பழம், காய்கறி தள்ளுவண்டி பெறுவ தற்கான உத்தேச பயனாளிகளின் பட்டியலை, சமுதாய தணிக்கை செய்வதற்காக புதுச்சேரி தாவரவி யல் பூங்காவில் உள்ள வேளாண்கூடுதல் இயக்குநர் (தோட்டக் கலை) அலுவலகத்தின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியல் வரும் ஜனவரி 8-ம் தேதி வரை ஒட்டப்பட்டிருக்கும்.
மேலும், புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையதளத்திலும் (https://agri.py.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
இப்பட்டியலில் ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் வரும் ஜனவரி 8-ம் தேதிக்குள் புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் உள்ள வேளாண் கூடுதல் இயக்குநர் அலுவலகத்தில் எழுத்துப் பூர்வமாக தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
கிராமப்புற மக்களின் நம்பிக்கை நட்சத்திரம்- அசத்தலான அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள்!
Paytmல் LPG சிலிண்டர் Book செய்தால் ரூ.500 Cashback - சலுகை 2 நாட்கள் மட்டுமே!
குளிரில் உறைந்து வீணாகும் பயிர்களை பாதுகாக்கிறது பசுவின் சிறுநீர்! ஆய்வில் தகவல்!