1. தோட்டக்கலை

நஞ்சில்லா உணவு உற்பத்தி செய்ய நீங்க ரெடியா?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Ready to produce non-toxic food? Call for farmers!

Credit: You Tube

நஞ்சில்லா உணவு உற்பத்தி செய்ய முன்வருமாறு புதுக்கோட்டை மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் இரா. ஆனந்த செல்வி விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

  • அங்கக வேளாண்மையில் ஈடுபட்டுள்ளோர் தமிழ்நாடு அங்ககச்சான்றுத்துறையின் மூலம், தனி நபராகவோ அல்லது குழுவாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.

  • அங்கக வேளாண்மையில் ஈடுபட்டுள்ள பெரு வணிக நிறுவனங்களும், அங்கக விளைபொருட்களைப் பதன் செய்வோரும், வணிகம் மற்றும் ஏற்றுமதி செய்வோரும் பதிவு செய்து கொள்ளலாம்.

  • இன்றைய கொரோனா தொற்றுக் காலக்கட்டத்தில் மனிதர்கள் நோயின்றி வாழவும், ஆரோக்கியமான எதிர்கால சந்ததியினை உருவாக்கவும் இயற்கை விவசாயத்திற்கு மாறுவது காலத்தின் கட்டாயமாகும்.

  • நோய் எதிர்ப்பு சக்தியைத் தரக்கூடிய காய்கறி, கீரை மற்றும் பழ வகைகளை அதிக அளவு உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

  • ஆனால் இத்தகைய பயிர்களில் பெருமளவு இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருவதால், இவை உடல் நலத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் மண்வளம் குறைவதுடன் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது.

Credit : Youtube

  • புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏறக்குறைய 100 ஹெக்டேரில், காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. எனவே, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

  • புதுக்கோட்டை மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை மூலமாக தேசிய வளர்ச்சி திட்டத்தின்கீழ், இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வெண்டை, கத்தரி, தக்காளி பயிரிட ஹெக்டேருக்கு ரூ.3,750 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்பட உள்ளது.

  • இந்த ஊக்கத்தொகையைப் பெற விரும்பும் இயற்கை விவசாயிகள் தங்கள் விண்ணப்பத்துடன், சிட்டா மற்றும் அடங்கல், ஆதார அட்டை நகல், குடும்ப அட்டை நகல் பயனாளியின் புகைப்படம் (2), நில வரைபடம் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகலுடன் தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநரை அணுக வேண்டும்.

  • மேலும் விபரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தை 04322227667 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் படிக்க...

சாகுபடியை அதிகரிக்க விவசாயிகளைத் தேடி வந்து உதவும் வேளாண் துறையின் புதியத் திட்டம்!

அன்னாசி பழத்தை தினமும் சாப்பிடலாமா?

TNAUவின் புதிய ரகங்கள், ஒட்டுரகங்கள் - காணொளிக் கண்காட்சி மூலம் வணிகமயமாக்கல்!

English Summary: Ready to produce non-toxic food? Call for farmers!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.