Farm Info

Tuesday, 08 March 2022 08:25 AM , by: Elavarse Sivakumar

தஞ்சையில் மாவட்ட முயற்சியால் 60 ஆயிரம் ஏக்கரில் நஞ்சை உளுந்து சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக அரசால் வேளாண்மைத் துறைக்கென 2021-22ம் ஆண்டிற்கான தனி நிதிநிலை அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி வேளாண்துறை பெயரினை வேளாண்மை-உழவர் நலத்துறை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு இயற்கை நிலையான வேளாண்மையை என்ற ஊக்குவித்து வேளாண் வளர்ச்சிக்கு வழிவகுத்து வருகிறது.

இந்நிலையில் தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு 2021-22ம் ஆண்டில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்துவதற்காக ரூ.2,327 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில், 2020-21ம் ஆண்டு சம்பா பருவப் பயிர்களுக்கான அரசின் பயிர்க் காப்பீட்டுக் கட்டண மானியமாக ரூ.1,553.15 கோடி காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.

இதன் ஒருபகுதியாக, தஞ்சையில் நஞ்சை உளுந்து திட்டம் செயல்படுகிறது. இகுறித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ்ஆலிவர் கூறியதாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் நெற்பயிர் சாதாரணமாக 4.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை 5 லட்சத்து 15 ஆயிரத்து 915 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக குறுவை பருவத்தில் 1 லட்சத்து 66 ஆயிரத்து 135 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டது. இது கடந்த 48 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகபட்ச சாகுபடியாகும்.

இந்த நிலையில் தற்போது தஞ்சை மாவட்டத்தில் சம்பா தாளடி அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து உளுந்து சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் 22 ஆயிரம் ஏக்கரில் உளுந்து சாகுபடி செய்யப்பட்டது.

தஞ்சையில் உளுந்து திட்டம் என்ற திட்டத்தை செயல்படுத்திட முடிவு செய்யப்பட்டது. இதன்படி, சம்பா, தாளடி அறுவடை ஆன பின்னர் நஞ்சை உளுந்து திட்டம் செயல்படுத்த முன்வந்தோம். இதன்மூலம் மண்வளம் பாதுகாத்து, பயிர் சுழற்சி செயல்படுத்தப்படுவதால், மண்ணில் தழைச்சத்து நிலைநிறுத்தப்பட்டு மண் வளம் அதிகரிக்கும். 

இந்த ஆண்டு உளுந்து சாகுபடிக்கு முக்கியத்துவம் கொடுத்து கூடுதலாக 37 ஆயிரத்து 500 ஏக்கரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதன் பயனாக இந்த ஆண்டு தற்போது வரை 60 ஆயிரம் ஏக்கரில் உளுந்து பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த 60 ஆயிரம் ஏக்கரில் இருந்து 20 ஆயிரம் டன் உளுந்து உற்பத்தி ஆகும் எனவும், இதன் மதிப்பு இன்றைய சந்தை விலையில் ரூ.140 கோடி ஆகும். இதில் கிராமிய பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.

மேலும் படிக்க...

200 ஆடுகள், 2500 கிலோ பிரியாணி- சுடச்சுட பிரியாணிப் பிரசாதம்!

புதியக் காற்றழுத்த தாழ்வு மண்டலம்- சென்னைக்கு ஆபத்து!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)