1. வாழ்வும் நலமும்

200 ஆடுகள், 2500 கிலோ பிரியாணி- சுடச்சுட பிரியாணிப் பிரசாதம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
200 goats, 2500 kg biryani- baked biryani offering!

அசைவப் ப்ரியர்களைப் பொறுத்தவரை, பிரியாணியைச் சாப்பிடும்போது அலாதி இன்பம் கிடைப்பதாகவே உணர்கிறார்கள். அதனால்தான், ஒவ்வொருத் தெருவிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட பிரியாணிக் கடைகள் உள்ளன. விற்பனை செய்வதே பிரியாணிதான் என்ற போதிலும், அதன் சுவை கடைக்குக் கடை மாறுகிறது. அந்த வகையில் முனியாண்டி விலாஸின் பிரியாணி, தனிச்சுவையைக் கொண்டது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா, கள்ளிக்குடி அருகே உள்ளது வடக்கம்பட்டி என்ற கிராமம். இந்த கிராமம்தான் முனியாண்டி விலாஸ் ஹோட்டலின் தாய் வீடு.வடக்கம்பட்டி ஊரில் முனீஸ்வரருக்கு கோயில் உள்ளது.
பிழைக்க வழி காட்டிய முனியாண்டி விலாஸ் ஹோட்டல் உதிக்கக் காரணமாக இருந்த முனீஸ்வரருக்கு ஒவ்வொரு ஆண்டும் தை இரண்டாம் வெள்ளி காலை பால்குடம் எடுத்தும் மாலை அர்ச்சனை தட்டு எடுத்து வந்து முனீஸ்வரருக்கு பூஜைகள் நடத்தப்படுகிறது.

பின்னர், இரவு முழுவதும் கிடா வெட்டு நடைபெற்று, 50 பிரமாண்ட பாத்திரங்களில் சமையல் பணி நடைபெற்றது. சமையல் வேலைகள் முடிந்த பின்னர் காலை 4 மணியளவில் முனீஸ்வரருக்கு படையல் வைத்து பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம்.

இதனையடுத்து சுற்றுப்புறம் உள்ள 50 கிராம மக்களுக்கும் சுடச் சுட பிரியாணி வழங்கப்பட்டது. முனீஸ்ரவர் விழாவின்போது பக்தர்களுக்குப் பிரசாதமாக மட்டன், சிக்கன் பிரியாணி வழங்கப்படுவது இதன் சிறப்பாகும்.
85 ஆவது ஆண்டாக இந்த முனியாண்டி திருவிழா நடைபெற்றது. இந்தாண்டு 200க்கும் மேற்பட்ட ஆடுகள், 300க்கும் மேற்பட்ட கோழிகள், 2500 கிலோ பிரியாணி அரிசி கொண்டு பிரியாணி சமைக்கப்பட்டு, பின்னர் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதனை சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பலரும் வாங்கிச் சென்றனர்.

சாமிக்கு பொங்கல்

முனியாண்டி கோயிலில் உள்ள முனீஸ்வரர் சைவம். எனவே அவருக்கு பொங்கல் படைக்கப்படுவதாகவும் அவர் அருகில் உள்ள கருப்பணச்சாமிக்கு கெடா வெட்டி படையல் வைக்கப்படுவதாகவும் கூறுகின்றனர். வடக்கம்பட்டியில் களைகட்டிய முனியாண்டி திருவிழா முனீஸ்வரர் கோயில் மட்டன் பிரியாணியை யார் வேண்டுமானாலும் வாங்கிச் சாப்பிடலாம். வீட்டுக்கும் வாங்கிச் செல்லலாம். சிறிய அளவில் தொடங்கிய இந்த நிகழ்ச்சி, தற்போது மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது. வியாழன் மற்றும் வெள்ளி இரவு வரை மக்களுக்கு மற்றும் விழாவில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் 6 முறை சைவ உணவு வழங்கப்படுவதாகவும், சனிக்கிழமை காலை மட்டும் பிரியாணி பிரசாதமாக வழங்கப்படுகிறது.

இந்த விழாவிற்கான முழு ஏற்பாடுகளும் முனியாண்டி விலாஸ் உரிமையாளர்களும், அவர்களின் உறவினர்களுமே செய்கின்றனர். அதிகாலை வழங்கப்படும் பிரியாணி பிரசாதம் சாப்பிடுவதன் மூலம் குழந்தை வரம், கல்யாண வரம், வீடு வாகனம் வாங்கும் யோகம், நோய்கள் சரியாவதாக முனியாண்டி விலாஸ் உரிமையாளர்கள் மற்றும் உறவினர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க...

பழிவாங்கிய பல்- அறுவைசிகிச்சைக்கு ஆசைப்பட்ட Brush!

புதியக் காற்றழுத்த தாழ்வு மண்டலம்- சென்னைக்கு ஆபத்து!

English Summary: 200 goats, 2500 kg biryani- baked biryani offering! Published on: 06 March 2022, 08:11 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.