திருத்துறைப்பூண்டியில் வரும் 5ம் தேதி நடைபெறவுள்ள தேசிய நெல் திருவிழாவில், விவசாயிகள் பெருமளவில் கலந்துகொண்டு பயனடையுமாறுக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
விடை பெறுகின்றன (Receive answers)
பாரம்பரிய நெல் ரகங்கள் படிப்படியாக நம்மிடம் இருந்து விடைபெற்றுச் சென்று கொண்டிருக்கின்றன.
நெல் திருவிழா (Paddy Festival)
இதனைத் தடுத்து, பாரம்பரிய நெல் ரகங்களை மீட்கும் முயற்சியாக மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரால் தொடங்கிவைக்கப்பட்டு, மறைந்த நெல் ஜெயராமனால் ஆண்டுதோறும் தேசிய நெல் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
5ம் தேதி ( 5th August)
இது தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, சமூக இடைவெளியுடன் வரும் 5ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில், ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் சார்பில் இந்த திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நெல் கண்காட்சி (Paddy Exhibition)
இந்த நெல் திருவிழாவில் 174 வகையான பாரம்பரிய நெல் வகைகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு, அந்த வகைகள் குறித்த பல்வேறு அரியத் தகவல்களும் அளிக்கப்படுகிறது.
மேலும் இயற்கை வேளாண் கருத்தரங்கம், பாரம்பரிய மதிய உணவு விருந்து மற்றும் கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விதை நெல் இலவசம் (Seed paddy is free)
நெல் திருவிழாவில் கலந்துகொள்ளும் அனைவருக்கும், பாரம்பரிய விதை நெல் இலவசமாக வழங்கப்படும்.
முன்பதிவு அவசியம் (Booking is required)
இதில் கலந்துகொள்ள விரும்புபவர்கள், திருத்துறைப்பூண்டி நெல் ஜெயராமன் அலுவலகத்தை 9843749663, 9443320954 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு, தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் படிக்க...
பயிர்க் காப்பீட்டு கட்டணத்தில் மாற்றம்: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்!
கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் வழங்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்!