1. தோட்டக்கலை

வீட்டுத் தோட்டத்திற்கும் ஆடிப்பட்டமே உகந்தது- தேடி விதைப்போம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Adipattam is ideal for home gardening - let's search and sow!

ஆடிப்பட்டத்தில் தேடி விதைப்போம் என்பது நம் ஆன்றோர் வாக்கு. அந்த வகையில் ஆடி 18 என்பது பயிர் சாகுபடிக்கு மட்டுமல்ல, வீட்டுத் தோட்டத்திற்கு உகந்த நாள்.

ஆடி 18 (Audi18)

ஆடி மாதத்தில் வரும் 18ம் நாள் என்பது அனைத்தையும் பெருக்கித்தரும் நாள் என்பது ஐதீகம். ஆக, ஆடி 18ல் வீட்டில் கையளவு இடத்தில் ஏதாவது விதைகளை இட்டு வளர்த்தால் வீட்டின் வளம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

பட்டம்

பட்டம் என்பது காலநிலையின் குறியீட்டு வார்த்தை. பட்டத்துக்கு ஏற்றவாறு பயிர் செய்வது மிகவும் முக்கியம் ஆகும். பட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதே பாரம்பரிய விவசாயத்தின் ஆணி வேர்.

ஒரு பயிர் சாகுபடி செய்த நிலத்தில் தொடர்ந்து மீண்டும் அதே பயிரைச் சாகுபடி செய்யவும் மாட்டார்கள். வருடத்தில் எந்தெந்தப் பட்டத்தில் என்னென்ன பயிர் சாகுபடி செய்ய வேண்டுமோ அந்தந்தப்பட்டத்தில் அந்தந்தப் பயிர்தான் சாகுபடி செய்வார்கள்.

ஆடிப்பட்டம் (Harvest)

அந்த வரிசையில், ஆடிப்பட்டத்தில் தானியப் பயிர்கள் அனைத்தும் சாகுபடி செய்வார்கள், தவிரக் காய்கறிப் பயிர்களும் பெரும்பாலானவற்றைச் சாகுபடி செய்வார்கள்.
மார்கழிப்பட்டம், மாசிப்பட்டம், சித்திரைப் பட்டம் என்றும் தமிழ் மாதங்களைக் கணக்கிட்டும் அந்தந்தப் பட்டத்துக்கு ஏற்ற பயிர்களைச் சாகுபடி செய்வார்கள்.

அறுவடை (Harvest)

 • ஆடிப்பட்டத்தில் பாதி நிலத்தில் மானாவாரியாகச் சாமை விதைத்து கார்த்திகை, மார்கழி மாதங்களில் அறுவடை செய்யலாம். மீதிப் பாதி நிலத்தில் மாசி, பங்குனி மாதங்களில் சோளம் விதைத்து ஆனி மாதவாக்கில் அறுவடை செய்யலாம்.

 • மறு வருடம் சாகுபடி செய்யும்போது முந்தைய வருடம் சாமை விவசாயம் செய்த நிலத்தில் சோளமும், சோளம் விவசாயம் செய்த நிலத்தில் சாமையும்தான் சாகுபடி செய்வர்.

தொடரும் பாதிப்பு (Continuing vulnerability)

 • நிலத்தில் ஒரு பயிர் செய்தால் அந்தப் பயிரின் ஆயுளுக்குப் பின்னால் அவற்றின் கழிவுகளும் அவற்றில் அண்டி வாழ்ந்து வந்த நோய்க் கிருமிகளும், அடுத்து அதே பயிர் செய்யும்போது புதிதாகச் செய்யும் பயிரையும் பாதிக்க ஏதுவாகிறது.

 • எனவே மாற்றுப் பயிர் செய்யும்போது மாற்றுப் பயிர்களுக்கு முந்தைய பயிரின் கழிவுகள் எருவாகப் பயன்படுவதோடு, முந்தைய பயிரில் தங்கி வாழ்ந்த நோய்க்கிருமிகளும் புதுப்பயிரைத் தாக்குவது இல்லை.

கிருமிகள் அழியும் (The germs will die)

இதனால் நோய்களும் நோய்க்கிருமிகளும் பயிருக்குப் பயிர் வேறுபடுகின்றன. இதன் காரணமாகப் பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை. மாறாகக் கிருமிகளை அழிகின்றன.

குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின்னால் வேறொரு பயிர் செய்தபின்னால் மீண்டும் பழைய பயிர் சாகுபடி செய்வதால் எந்தப் பாதிப்பும் ஏற்படுவது இல்லை. இடைக்காலத்தில் அவை பெரும்பாலும் அழிந்து விடுகின்றன.

விதைப்பிற்கான ஏற்பாடு (Arrangement for sowing)

 • விதைப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன் காலியிடத்தில் ஒன்றரை அடி நீள, அகலம், ஆழத்தில் குழிகள் தோண்டி, ஒரு வாரத்திற்கு வெயில் படும்படி காயவிட வேண்டும்.

 • பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் கொடி வகைகளுக்கு அதிக இடைவெளியும், செடி அவரை, கொத்தவரை, வெண்டை, முள்ளங்கி, பீட்ரூட் போன்ற குத்துச்செடிகளுக்கு குழிக்குக்குழி 3 அடி இடைவெளியும் விட வேண்டும்.

விதைப்பு (Sowing)

 • மட்கிய தொழுஉரம் அல்லது மண்புழு உரம், செம்மண் அல்லது மணல், தோண்டப்பட்ட காய்ந்த மேல் மண்ணை தலா ஒரு பங்கு வீதம் கலந்து குழியில் பாதிக்கு மேல் நிரப்பவேண்டும்.

 • குழி ஒன்றுக்கு 250 கிராம் வேப்பம் புண்ணாக்கு துாள் அல்லது இடிக்கப்பட்ட வேப்பம் விதைத்துாளை மண்ணுடன் கலக்கவேண்டும்.

 • அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா நுண்ணுயிர் கலவையை குழி ஒன்றுக்கு 50 கிராம் வீதம் தொழுஉரம், மண்புழு உரத்துடன் கலந்து தூவ வேண்டும்.

20 விதைகள் (20 seeds)

 • ஒரு குழிக்கு 10 முதல் 20 விதைகள் விதைக்க வேண்டும். 15ம் நாள் நன்றாக வளர்ந்த செடிகளை தவிர மற்றவற்றை களைந்து விட வேண்டும்.

 • விதைத்த உடனும், அடுத்து 3ம் நாளும் அடுத்தடுத்து மண்ணின் தன்மைக்கேற்ப 4 முதல் 7 நாட்களுக்கொரு முறை நீர்பாய்ச்ச வேண்டும்.

வேப்பெண்ணெய் கரைசல் (Neem oil solution)

 • பூச்சித்தாக்குதல் தென்பட்டால் 5 சதவீத வேப்பங்கொட்டை கரைசல் அல்லது 2 சதவீத வேப்ப எண்ணெய் கரைசலைத் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

 • பயிர்க்குழி விவசாயத்தின் மூலம் குறைந்த செலவில் நிறைந்த மகசூல் பெறலாம்.

 • நஞ்சில்லாத இயற்கை உணவு உற்பத்தி செய்யலாம்.

 • சத்துக்கள் வீணாகாமல் பறித்தவுடன் சமைக்கலாம்.

மேலும் படிக்க...

கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் வழங்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்!

குறுமிளகு கொடிகளில் நோய்த் தாக்குதலைத் தடுக்க மருந்து தெளிக்கும் விவசாயிகள்!

English Summary: Adipattam is ideal for home gardening - let's search and sow!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.