பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 29 November, 2020 6:30 PM IST
Credit : Samayam

வீட்டுத் தோட்டத்தில் காய்கறி செடிகளை வளர்ப்பவர்கள், காய்கறிகள் அதிகமாக கிடைக்க இயற்கை உரத்தை வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தலாம். காய்கறிகளும் அதிகம் கிடைக்கும். இரசாயன உரமில்லாமல் சத்தான காய்கறிகளும் கிடைக்கும். உங்கள் வீட்டு செடிகளுக்கு வேண்டிய இயற்கை உரம் (Natural Fertilizer) தயாரிப்பதற்கு முன்பு உங்கள் செடிகளின் ஆரம்ப கட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

மண்ணுடன் தேங்காய் நார்:

மாடி தோட்டம் போடுபவர்கள் என்றில்லாமல் வீட்டில் இருக்கும் சிறிய இடங்களிலும் தொட்டியில் காய்கறி செடிகளை வைத்து பராமரிப்பார்கள (Maintanence) மற்றும் மொட்டை மாடியில் சிறிய அளவில் தோட்டம் போல் பழங்கள், காய்கறிகள் என்று தொட்டியில் பயிரிட்டு வளர்ப்பார்கள், வயலாக இருந்தாலும் தொட்டியில் இருந்தாலும் செடிகளில் பூச்சி அரிப்பது நடக்க கூடியது தான். இதை தவிர்க்க செடி வைக்கும் போதே சரியான மண் (soil) பயன்படுத்த வேண்டும். வெறும் மண்ணை மட்டும் எடுக்க கூடாது. இது அதிக எடை கொண்டிருப்பதால் தொட்டியின் கனம் அதிகமாக இருக்கும்.

குறிப்பாக மாடிதோட்டம் போடுபவர்கள் வெறும் மண்ணை மட்டும் பயன்படுத்தவே கூடாது. செடி வைக்கும் போது நான்கில் ஒரு பங்கு மண், ஒரு பங்கு கோகோ பீட் என்று சொல்லகூடிய தேங்காய் நார் துகள்கள் (Coconut fiber granules), ஒரு பங்கு மக்கிய உரம், ஒரு பங்கு ஆற்று மணல் என்று நான்கையும் சம அளவு கலந்து பயன்படுத்த வேண்டும். தேங்காய் நார் துகள்களை இரண்டு முறை நீரில் கழுவி பயன்படுத்த வேண்டும்.

மண்ணை வளப்படுத்தும் முறைகள்:

செடிகளுக்கு செம்மண் எப்போதும் சிறந்தது என்றாலும், அந்த மண் கிடைக்காத நிலையில் மண்ணை வளப்படுத்த சில முறைகள் கடைப்பிடிக்க வேண்டும். உங்கள் பகுதியில் கிடைக்கும் மண்ணை எடுத்து அதில் இருக்கும் பெரிய கற்களை அகற்றி மண்ணை சுத்தம் (Clean) செய்யவும். பிறகு அதை பயன்படுத்த வேண்டும். செடி வைக்கும் போதே மண்ணில் வேப்ப எண்ணெய் (Neem Oil) அல்லது வேப்பம் புண்ணாக்கு பொடியை கலந்து விட்டால் விதைகளோ, வேரோ நன்றாக பற்றிக்கொள்ளும். மண்ணுக்கு சமமாக மணல் சேர்ப்பது நல்லது. இல்லையெனில் இது வேர்பகுதியை இருக்கி கட்டியாக்கிவிடும். கீரைகளோ, காய்கறிகளோ, பழச்செடிகளோ அதற்கேற்ப மண்ணை நிரப்ப வேண்டும். சிறிதாக சிறிதாக செடிகளை வளர்க்க செய்யலாம். அப்போதுதான் எல்லாவற்றையும் கவனமாக பராமரிக்க முடியும். செடிகள் பட்டு போகாமல் பார்க்க முடியும்.

உரம் தயாரிப்பு:

அமில கரைசல் மிகவும் பிரபலமான கரைசல். இதை எளிதாக தயாரிக்கவும் முடியும். இதற்கு தேவையான பொருள்கள்

தண்ணீர் - 10 லிட்டர்
பசுமாட்டு சாணம்- 1 கிலோ
பசுவின் கோமியம் - 1 லிட்டர்
நாட்டுசர்க்கரை அல்லது வெல்லம் -100 கிராம்.

மண் பானை (Pot) ஒன்றில் இவை அனைத்தையும் சேர்த்து பெரிய மரக்கரண்டி அல்லது நீளமான குச்சி கொண்டு கலக்கவும். 50 முறை இடப்பக்கமாகவும் 50 முறை வலப்பக்கமாகவும் சுற்ற வேண்டும். பிறகு 3 மணி நேரம் கழித்து மீண்டும் இதே போல் இரண்டு பக்கமும் கலக்க வேண்டும். தினமும் மூன்று வேளை இரண்டு நாள் இப்படி செய்ய வேண்டும். அவ்வளவுதான் அமில கரைசல் (Acid solution) தயார். ஒரு லிட்டர் அமில  கரைசலில் 10 லிட்டர் தண்ணீர் கலந்து செடிகளுக்கு தெளிக்க வேண்டும். ஒரே வாரத்தில் செடிகள் பசுமையாக தழைத்து ஓங்கும்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

உரச்செலவை குறைப்பது எப்படி? வழிகாட்டுகிறது உழவர் பயிற்சி நிலையம்!

மானிய விலையில் காய்கறி விதைகள்! வீட்டுத் தோட்டம் அமைத்தால், சத்தான உணவு!

English Summary: Natural compost for the home garden can be made at home! Find out how!
Published on: 29 November 2020, 06:30 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now