Farm Info

Saturday, 28 August 2021 03:16 PM , by: Elavarse Sivakumar

Credit: India TV times

வங்கக் கடலில் உருவான புதியக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று, மிக கனமழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது:

28.08.21

மிக கனமழை (Very heavy rain)

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கனமழை (heavy rain)

தேனி, திண்டுக்கல், சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

29.08.21

மிக கனமழை (Very heavy rain)

நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.

கனமழை (heavy rain)

  • தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

  • ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான ம பெய்யக்கூடும்.

28.08.21 முதல் 30.08.21 வரை

தென் மேற்கு மற்றும் மத்திய அரபிக் கடல் பகுதிகளில் பலத்தக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உதவ அரசின் புதிய திட்டம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)