வட மேற்கு வங்கக்கடலில் வரும் 21-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று (Southwest monsoon)
தமிழ்நாட்டில் தென்மேற்குத் பருவக் காற்று காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், தருமபுரி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இடியுடன் கூடிய மழை (Thunderstorms)
இதுதவிர மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், கன்னியாகுமரி மற்றும் ஒருசில உள்ள மாவட்டங்கள் கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
கன மழை (Heavy Rain)
சென்னையில் இன்று மாலை முதல் மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதேபோல் சென்னையின் சுற்றுவட்டார பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
வானிலை மையம் (Weather Center)
இந்நிலையில் வடமேற்கு வங்கக்கடலில் வரும் 21ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு (Chance of heavy rain)
காற்றழுத்த தாழ்வுப் பகுதியால், கேரளா , கர்நாடகாவில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழைக்கு வாய்ப்பு (Chance of rain)
காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே சென்னை வானிலை மையத்தின் இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
16 மாவட்டங்களில் கனமழை (Heavy rain in 16 districts)
அடுத்த 24 மணி நேரத்தில், தர்மபுரி, சேலம், நீலகிரி, கோவை, தேனி, கிருஷ்ணகிரி, நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
மிதமான மழை (Moderate rain)
வட மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை (Chennai)
சென்னையின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தெற்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடல், தென்மேற்கு அரபிக்கடல், மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு வரும் 21ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் புவியரசன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
ஆசிரியர் தொழிலுடன் சேர்த்து, தினமும் 8 கிலோ சம்பங்கி பூ சாகுபடி செய்து அசத்தும் பெண் விவசாயி!