திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மிகவும் பழமையான முறையான ஆர்கானிக் முறையில் நெய்வேத்யங்களை தயாரித்து வழங்க முடிவு செய்துள்ளது.
உலகப் பிரசித்தி பெற்றது (World famous)
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் அமைந்துள்ள ஏழுமலையான் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
கொரோனாக் கட்டுப்பாடுகள் (Coronac controls)
தற்போது கொரோனாப் பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
திருமலையில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதுமட்டுமின்றி அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு பிரசாதங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆர்கானிக் நெய்வேத்யம் திட்டம் (Organic Weaving Project)
இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம், ஆர்கானிக் முறையில் நெய்வேத்யங்களை தயாரித்து வழங்க முடிவு செய்துள்ளது. இந்த முறையானது சுமார் நூறாண்டுகளுக்கு முன்பு பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்த நடைமுறை பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த சூழலில் கடந்த ஒன்றாம் தேதி திருமலையில் ஆர்கானிக் நெய்வேத்யம் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்தத் திட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தானத் தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி கூறியதாவது:
100 ஆண்டுகளுக்கு முன்பு (100 years ago)
இயற்கையான முறையில் விளைந்த காய்கறிகள், பழங்கள், உணவுப் பொருட்கள், வெல்லம், நெய், தானியங்கள், அரிசி ஆகியவற்றை கொண்டு ஸ்ரீவாரி நெய்வேத்யம் தயாரிக்கப்படும். இந்த முறை 100 ஆண்டுகளுக்கு முன்பு திருமலையில் பயன்பாட்டில் இருந்த வழக்கம் தான். ஆனால் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டு விட்டது.
கூடுதல் சுவை (Extra Taste)
தற்போது, ஆர்கானிக் முறையில் விளைந்த கடலை மாவு (Bengal Gram), வெல்லம் ஆகியவற்றைக் கொண்டு லட்டு தயாரிக்கப்பட்டது.
பக்தர்கள் வரவேற்பு (Devotees welcome)
இதனைச் சாப்பிட்டு பார்த்த பக்தர்கள் பலர், முன்பை விட மிகவும் சுவையாகவும், தரத்துடனும் இருப்பதாகக் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
விவசாயிகளுடன் கைகோர்ப்பு (Hand in hand with farmers)
இதன் அடிப்படையில், விவசாயிகளைத் தொடர்பு கொண்டுள்ளோம். அவர்களிடம் இருந்து இயற்கையான முறையில் விளைந்தப் பொருட்களைத் தொடர்ந்து வாங்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
நுண்ணுயிர்களைப் பெருக்க உதவும் ஜீவாமிர்தக் கரைசல்!
இரண்டரை ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு, ரூ.1.13 லட்சம் மானியம்!
2,600 ஏக்கர் விவசாயத்துக்கு தண்ணீர் விடக்கோரி நெல்லை கலெக்டருக்கு விவசாயிகள் கோரிக்கை!