1. விவசாய தகவல்கள்

நுண்ணுயிர்களைப் பெருக்க உதவும் ஜீவாமிர்தக் கரைசல்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Antimicrobial solution that helps to multiply microorganisms!

ஒரு கிராம் மண்ணில் 5 லட்சம் கோடிக்கும் அதிகமான நுண்ணுயிரிகள் இருக்கின்றன. ஒவ்வொரு 20 நிமிடத்துக்கும் இந்த நுண்ணுயிரிகள் இரட்டிப்பு அடைகின்றன.

ஜீவாமிர்தக் கரைசல் (Antiseptic solution)

அந்த வகையில், மண்ணில் உள்ள நுண்ணுயிர்களைப் பெருக்க உதவும் பொருள்தான் ஜீவாமிர்தக் கரைசல். இதனை எல்லா வகை மண்ணிலும் பயன்படுத்தி, அதன் நுண்ணுயிர்களைப் பெருக்கலாம்.

தேவையான பொருட்கள் (Ingredient)

நாட்டுப் பசுஞ்சாணம்      -10 கிலோ

நாட்டுப் பசுங்கோமியம்   - 5 முதல் 10 லிட்டர்

வெல்லம்                          - 2 கிலோ

(அ) கரும்புச்சாறு             - 4 லிட்டர்

தானிய மாவு                    - 2 கிலோ (தட்டைப்பயறு

(அ) துவரை (அ) கொள்ளு (அ) கொண்டைக் கடலை (அ) உளுந்து)

காட்டின் மண்                 - கையளவு

தண்ணீர்                         - 200 லிட்டர் (குளோரின் கலக்காதது)

தயாரிக்கும் முறை (Preparation)

  • 200 லிட்டர் தண்ணீரில் சாணம், கோமியம், வெல்லம் அல்லது கரும்புச்சாறு, தானியமாவு ஆகியவற்றுடன் கையளவு மண் சேர்த்து ஒரு தொட்டியில் இட்டு கலக்க வேண்டும்.

  • தினமும் 3 முறை 3 நாட்களுக்குத் தவறாமல் கலக்கி விட வேண்டும்.

பயன்படுத்தும் முறை

  • தெளிப்புக்காக எடுக்கும்போது கரைசலின் மேற்புறத்தில் இருக்கும் தெளிவை மட்டும் எடுத்து வடிகட்டிப் பயன்படுத்த வேண்டும்.

  • ஒவ்வொருப் பயிருக்கும் குறிப்பிட்ட அளவு வடிகட்டிய ஜீவாமிர்தத்தை குறிப்பிட்ட அளவு நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

  • அதேபோல் காய் பிடிக்கும் சமயத்தில் புளித்தமோர், முளைகட்டிய தானியக் கலவை, தேங்காய்த் தண்ணீர் ஆகியவற்றையும் தெளிக்க வேண்டும். இது அனைத்துப் பயிர்களுக்கும் பொருந்தும்.

பயன்கள் (Uses)

  • விதைநேர்த்தி செய்ய ஜீவாமிர்தம் மிகவும் உகந்ததாகும். விதை நேர்த்தி செய்ய விதைகளை இந்த கரைசலில் 2 மணி நேரம் ஊற விட வேண்டும்.

  • நாற்றுகளாக இருந்தால் அதன் வேர்களை நன்றாக நனையவிட்டுப் பிறகு நடவு செய்ய வேண்டும்.

  • ஜீவாமிர்தம் பாய்ச்சப்படும் பயிர்களை எந்த நோயும் தாக்காது.

  • ஜீவாமிர்தம் நீரில் கலந்து பயன்படுத்தும் போது மண்புழுக்களின் வரவு அதிகரிக்கிறது.

  • வேர் அழால், வேர்க்கரையான்,வேர்ப்புழு நோய்கள் முற்றிலும் தடுக்கப்படும்.

  • ஜீவாமிர்தம் அனைத்து மகை மண்ணையும் சத்து நிறைந்த மண்ணாக மாற்றி அமைக்கும் தன்மை கொண்டது.

  • ஜீவாமிர்தத்தைத் தெளிப்பதால் நுண்ணுயிர்களின் வளர்ச்சி பல மடங்கு அதிகரிக்கிறது.

  • ஜிவாமிர்தம் நுண்ணுயிர்களின் வளர்ச்சி பல மடங்கு அதிகரிக்கிறது.

தவிர்க்க வேண்டியது (To be avoided)

ஜீவாமிர்தத்துடன்,மூலிகைப் பூச்சிவிரட்டி, அக்னி அஸ்திரம், நீம் அஸ்திரா என மற்றக் கரைசல்கள் எதையும் சேர்க்கக்கூடாது. ஏனெனில் இரண்டு எதிரெதிர் கரைசல்களைச் சேர்க்கும்போது, அவை எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.

மேலும் படிக்க...

இரண்டரை ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு, ரூ.1.13 லட்சம் மானியம்!

2,600 ஏக்கர் விவசாயத்துக்கு தண்ணீர் விடக்கோரி நெல்லை கலெக்டருக்கு விவசாயிகள் கோரிக்கை!

மக்காச்சோளத்தில் படைப்புழு மேலாண்மை குறித்து வேளாண் அலுவலர் விளக்கம்!

English Summary: Antimicrobial solution that helps to multiply microorganisms! Published on: 03 May 2021, 08:26 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.