Farm Info

Sunday, 30 August 2020 07:47 AM , by: Elavarse Sivakumar

திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டார விவசாயிகள், சான்று பெற்ற நெல் விதைகளை மானிய விலையில் பெற, வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம், என, வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.

உடுமலைப்பேட்டை வட்டாரத்தில், அமராவதி அணையிலிருந்து, பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டிருப்பதால், சாகுபடி பணிகளில் விவசாயிகள்  மும்மரமாக ஈடுபட்டுள்ளனர். மண்ணை உழுதல், உள்ளிட்ட விதைப்புக்கான பணிகள் துரிதப்பட்டுள்ளது.இந்நிலையில், உடுமலை வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில், விவசாயிகளுக்கு தேவையான விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து வேளாண் துறையினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :

  • நெல், கரும்பு, மக்காச்சோளம், பயறு வகை சாகுபடிக்காக விளைநிலங்களை தயார்படுத்தி வருகின்றனர்.

Credit: Exporters India

  • வட்டாரத்தில், 650 ஹெக்டேர் பரப்பில், நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

  • இந்த சீசனுக்காக, சான்று பெற்ற, ஏடிடி (ஆர்)-45, மற்றும் கோ-51 நெல் ரகங்கள் மானிய விலையில், விற்பனை செய்ய இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

  • இதேபோல், பயறு வகை பயிர்களில், உளுந்து வம்பன்-8 ரகமும், கொண்டைக்கடலை, கம்பு, சோளம் மற்றும் சிறுதானிய விதைகளும் இருப்பில் உள்ளன.

  • விதை, உயிர் உரங்களை விவசாயிகள் மானிய விலையில் பெற்று பயன்பெறலாம்.

  • சான்றிதழ் பெற்ற ரகங்கள் நல்ல மகசூலைத் தருபவை என்பதை விவசாயிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

நச்சுன்னு உடல் எடையைக் குறைக்கனுமா? உணவில் நெய் சேர்த்துக்கோங்க!

பார்த்தீனியம் செடியில் இருந்து பலவித உரங்கள்- தயாரிப்பது எப்படி?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)