இந்தியாவில் இருந்து பருத்தியும், சர்க்கரையும் இறக்குமதி செய்ய விதிக்கப்பட்டிருந்த இரண்டு ஆண்டுகாலத் தடையை பாகிஸ்தான் அரசு விலக்கிக்கொண்டுள்ளது.
உறவு முறிப்பு (Relationship breakdown)
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதால் பாகிஸ்தான், இந்தியா உடனான தூதரக உறவை முறித்துக் கொண்டது. இந்தியா, பாகிஸ்தான் வர்த்தகம், போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், பாகிஸ்தானின்
சிறப்புக் கூட்டத்தில் முடிவு (Decision at the special meeting)
பொருளாதார ஒத்துழைப்பு குழு கூட்டம் இஸ்லாமாபாத்தில் அண்மையில் நடந்தது. இந்த கூட்டத்தில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய விதிக்கப்பட்டிருந்தத் தடையை விலக்கிக்கொள்வது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கூட்டத்திற்கு பிறகு, இது குறித்து நிதி அமைச்சர் ஹமாத் அசார் கூறுகையில், இக்கூட்டத்தில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கான 2 ஆண்டு கால தடை விலக்கி கொள்ளப்பட்டது. மேலும், இந்தியாவில் இருந்து 5 லட்சம் டன் சர்க்கரை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மீண்டும் வர்த்தகம் (Trade again)
இதன் மூலம், இந்தியா- பாகிஸ்தான் இடையிலான வர்த்தகம் மீண்டும் தொடர உள்ளது.
தற்போது, நடப்பாண்டு ஜூன் மாதம் முதல் இந்தியாவில் இருந்து பருத்தி இறக்குமதி செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ரம்ஜானை முன்னிட்டு (On the eve of Ramadan)
குறிப்பாக ரம்ஜானை முன்னிட்டு பாகிஸ்தானில் உள்நாட்டுபொருட்களின் விலைஉயர்வைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஏன் தடை? (Why the ban?)
முன்னதாக பாகிஸ்தானின் சிறுகுறு, நடுத்தர தொழில்துறையினர் பாதிக்கப்பட்டதால், பருத்தி இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
தமிழக முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல்! போலீசார் தீவிர விசாரணை
கோரை சாகுபடி தீவிரம்! விவசாயிகள் வாழ்வாதாரத்தை காக்க கோரைப்பாயை பயன்படுத்துவோம்!
ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ரூ.41¼ லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம்!