மானியத்தில் வேளாண் கருவிகள் பெற உழவன் செயலியில் பதிவு செய்ய வேண்டும் என, பயிற்சி வகுப்பில் தெரிவிக்கப்பட்டது. அல்லப்பாளையத்தில், 'நீடித்த நிலையான கரும்பு சாகுபடி' என்னும் தலைப்பில் உள் மாவட்ட அளவிலான ஒரு நாள் பயிற்சி விவசாயிகளுக்கு நடந்தது. பயிற்சியில், வேளாண் அலுவலர் சுகன்யா பேசுகையில், "தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க, வேளாண் கருவிகளை பயன்படுத்த வேண்டும்.
வேளாண் கருவிகள் (Agriculture Tools)
வேளாண் கருவிகளை மானிய விலையில் பெற உழவன் செயலியில் பதிவு செய்ய வேண்டும். இடுபொருட்களுக்கும் அதில் பதிவு செய்யலாம் என்றார். கோவை மண் பரிசோதனை ஆய்வக வேளாண் அலுவலர் அருண்குமார் பேசுகையில், "மண்வளம் பயிர் விளைச்சலுக்கு மிக முக்கியம்.
மண் வளத்தை காக்க பசுந்தாள் தாவரம் பயிரிட்டு உழவு செய்ய வேண்டும். ஒரே பயிரை தொடர்ந்து பயிரிடாமல் சுழற்சி முறையில் பயிர் செய்ய விவசாயிகள் பழக வேண்டும்.
இதனால் மண்ணில் உள்ள நன்மை செய்யக்கூடிய உயிரிகள், மண்ணில் உள்ள சத்துக்கள் பாதுகாக்கப்படும். உரம் இடுவதற்கு மண் பரிசோதனை அவசியம்.
மண் பரிசோதனை முடிவில் வழங்கப்படும் மண்வள அட்டையின் அடிப்படையில் தேவையான சத்துக்களைக் ஏற்ப உரம் இடவேண்டும்" என்றார். உதவி வேளாண் அலுவலர் பூபாலன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மேலும் படிக்க
4 நாட்களில் விவசாயிகளுக்கு அடங்கல் சான்றிதழ்: அமைச்சர் அறிவிப்பு!
தேங்காயை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை!