பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 11 வது தவணைத் தொகையைப் பெறக் காத்திருக்கும் விவசாயிகளுக்கு எப்போது பணம் கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவல், காத்திருக்கும் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு ஆறுதலைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விவசாயிகள் நிதிச்சுமையைத் தீர்க்கும் விதமாக, பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-Kisan) எனப்படும் பிரதமரின் விவசாய நிதியுதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி பொருளாதார ரீதியில் நலிவடைந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை 2018ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
மூன்று தவணைகளில் தலா ரூ.2,000 என ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே இந்தப் பணம் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது.
11-வது தவணை (11th installment)
இந்நிலையில், பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் இதுவரையில் மொத்தம் 10 தவணைகள் வழங்கப்பட்டுவிட்டன. 11-வது தவணை ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு வழங்கப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டிருந்தது. ஆனால் ஏப்ரல் மாதமே முடிந்துவிட்ட நிலையில் இன்னும் பணம் வந்துசேரவில்லை.
பணம் வரும் தேதி (Date of receipt of payment)
தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, மே 14, 15 ஆகிய தேதிகளில் 11ஆவது தவணை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டிலும் மே 15ஆம் தேதிதான் பணம் வழங்கப்பட்டது. அதேபோல, இந்த ஆண்டும் மே 15ஆம் தேதி வாக்கில் பணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணம் கிடைக்க வேண்டுமானால் விவசாயிகள் தங்களது கேஒய்சி சரிபார்ப்பை முடித்திருக்க வேண்டும். pmkisan வெப்சைட்டிலேயே அதற்கான வசதி உள்ளது.
மேலும் படிக்க...
நீட் தேர்வு- விண்ணப்பிக்கும் காலக்கெடு மே 15ம் தேதி வரை நீட்டிப்பு!
தரித்திரம் தொற்றிக்கொள்ளும் செடிகள்- இவற்றை வளர்க்க வேண்டாம்!