1. செய்திகள்

நீட் தேர்வு- விண்ணப்பிக்கும் காலக்கெடு மே 15ம் தேதி வரை நீட்டிப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
NEET - Application deadline extended to May 15th!

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலஅவகாசம் வரும் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு அகில இந்திய அளவில் நீட் எனப்படும் தேசிய தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்தத் தேர்வை பல மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் எழுதுகின்றனர்.

இதை முன்னிட்டு பல மாதங்கள் பாடத்திட்டத்தைப் படித்து தங்களைத் தயார்படுத்திக்கொண்டு, மருத்துவர் கனவை நிறைவேற்றிக்கொள்கின்றனர்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கானத் தேர்வு, நாடு முழுவதும் ஜூலை 17 -ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நீட் நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் செயல்முறை கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் தொடங்கியது.

மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை neet.nta.nic.in இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் அனைத்து விண்ணப்பதாரர்களும், உரிய கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்தி விண்ணப்ப படிவங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு வரும் 6-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்திருந்தது.

இந்நிலையில், வரும் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. வரும் 15-ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கு இதுவரை 14 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.15,000 மானியம்!

தரித்திரம் தொற்றிக்கொள்ளும் செடிகள்- இவற்றை வளர்க்க வேண்டாம்!

English Summary: NEET - Application deadline extended to May 15th! Published on: 02 May 2022, 10:27 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.