நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 16 October, 2022 4:00 PM IST
PM Kisan 12th installment release tomorrow!

PM Kisan 12-வது தவணையைப் பிரதமர் மோடி நாளை வெளியிடுகிறார், விவசாயிகளுக்கு பயிர்க்கடன் அறிவிப்பு! உரிய ஆவணங்களுடன் பயிர்க்கடன் பெறலாம், கிசான் சுரக்க்ஷா பீமா யோஜனா மூலம் விவசாயிகள் இலவச காப்பீடு செய்யலாம், TNAU-வில் நடைபெற்று வரும் மூன்று நாள் மாநில உழவர் தின விழா இன்றுடன் நிறைவு, தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம், காசு போட்டால் இட்லி கொடுக்கும் ஏடிஎம் மெஷின்: இட்லி ஏடிஎம் அறிமுகம், ஆகிய வேளாண் தகவல்களை இப்பதிவு வழங்குகிறது.

PM Kisan 12-வது தவணையைப் பிரதமர் மோடி நாளை வெளியிடுகிறார்!

2022 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதியான நாளை புதுதில்லியின் பூசாவில் உள்ள மேலா மைதானத்தில், "பிஎம் கிசான் சம்மான் சம்மேளன் 2022" என்ற இரண்டு நாள் நிகழ்வை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடி PM-KISAN ஃபிளாக்ஷிப் திட்டத்தின் கீழ் ரூ. 16,000 கோடிகள் நேரடி பயன் பரிமாற்றம் மூலம் 12வது தவணையை வெளியீடுவார். அக்ரி ஸ்டார்ட் அப் மாநாடு மற்றும் கண்காட்சியையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். மத்திய இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் 600 PM கிசான் சம்ருத்தி கேந்திராக்களை (PM-KSK) அவர் திறந்து வைப்பார், மேலும் உரங்களில் இந்தியாவின் மிகப்பெரிய நடவடிக்கையான பாரத் யூரியா பைகளின் பயன்பாட்டினையும் தொடங்க உள்ளார்.

விவசாயிகளுக்கு பயிர்க்கடன் அறிவிப்பு! உரிய ஆவணங்களுடன் பயிர்க்கடன் பெறலாம்!!

திண்டுக்கல் மாவட்டத்தில் நடப்பு ஆண்டிற்கான பருவமழை தொடங்கியுள்ளதால் அனைத்து விவசாயிகளும் பயனடையும் வகையில் மாவட்டத்தில் மொத்தம் 198 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாகப் பயிர் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 47,551 உறுப்பினர்களுக்கு ரூ.552.31 கோடி பயிக்கடன் வழங்கப்பட்டு உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் சாகுபடியாகும் பல்வேறு பயிகளுக்குக் கால்நடை வளர்ப்பு, மீன்வளர்ப்பு, தேவையான கடன் அளவு, காலம், தவணை ஆகியன அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகத் திண்டுக்கல் மாவட்ட மண்டல இணை பதிவாளர் கோ. காந்திநாதன் கூறியுள்ளார்.

கிசான் சுரக்க்ஷா பீமா யோஜனா மூலம் விவசாயிகள் இலவசக் காப்பீடு செய்யலாம்!

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதையும், அவர்களுக்கு நியாயமான விலையில் நல்ல விளைபொருட்களை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டு விவசாயிகளுக்கு இலவசக் காப்பீட்டினை இந்திய விவசாயிகள் உரக் கூட்டுறவு லிமிடெட் வழங்குகிறது. பருவமழை மற்றும் பருவநிலை மாற்றத்தால், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயிர் சேதத்தால் பாதிக்கப்படுகின்றனர். இப்பிரச்னையைத் தீர்க்கும் வகையில், IFFCO-MC Crop Science Pvt Ltd, 'கிசான் சுரக்ஷா பீமா யோஜனா' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கீழ் விவசாயிகளுக்கு விளைபொருட்களுடன் பயிர் காப்பீடும் இலவசமாக வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் மூன்று நாள் மாநில உழவர் தின விழா இன்றுடன் நிறைவு!

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பொன்விழா ஆண்டினைக் கொண்டாடும் விதமாக உழவர்தின விழா மூன்று நாட்கள் நடைபெற்றது. இந்த விழாவானது இன்றுடன் நிறைவடைந்தது. இவ்விழாவிற்குத் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் வருகை தந்தனர். தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற இவ்விழாவானது மதுரை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடந்துகொண்டிருக்கிறது. இதில் அதி நவீனத் தொழில் நுட்பங்கள், விவசாயத் திட்டங்கள் மற்றும் சேவைகளைக் காட்சிப்படுத்தும் தொழில்நுட்பங்கள், விவசாயிகளின் செயல்திறனை மேம்படுத்தும் வகையிலான செயல் விளக்கங்கள், பயிர் விதைகள், நாற்றுக்கள், பண்னை இயந்திரங்கள், உயிர் உரங்கள் ஆகியன விற்பனைக்கு வைக்கப்பட்டன.

தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம்!

திருச்சியில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தின் திருச்சி மண்டலப் பொதுக்குழு கூட்டம் இன்று பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தின் மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களிலிருந்து நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு லிட்டர் பசும்பால் 32 ரூபாயிலிருந்து 42 ரூபாயாகவும், எருமை பால் ஒரு லிட்டருக்கு 41 ரூபாயிலிருந்து 51 ரூபாயாக கொள்முதல் விலையை உயர்த்தி தரவேண்டும் என்ற கோரிக்கையினை வைத்துள்ளனர்.

மேலும் படிக்க

40% மானியத்தில் ட்ரோன்கள் | மாநில உழவர் தின விழா | உழவர்கள் கூட்டம் | அஸ்வகந்தா சாகுபடி | வானிலை தகவல்கள்

PM கிசான் update மற்றும் PM கிசான் சம்மான் சம்மேளன்-2022

English Summary: PM Kisan 12th installment release tomorrow!
Published on: 16 October 2022, 04:00 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now