Farm Info

Tuesday, 11 April 2023 04:20 AM , by: R. Balakrishnan

PM Kisan

விவசாயிகள் பிஎம் கிசான் திட்டத்தில் விண்ணப்பித்து 2000 ரூபாய் பணம் பெற முடியும். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் தற்போது விண்ணப்பித்தால் அடுத்த தவணை தொகை 2000 ரூபாயை பெறலாம். விவசாய குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்குவதற்காக பிஎம் கிசான் சம்மான் நிதி திட்டம் (PM Kisan Samman Nidhi) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா 6000 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

பிஎம் கிசான் (PM Kisan)

6000 ரூபாய் தொகை பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு மூன்று தவணைகளாக ஒரு தவணைக்கு 2000 ரூபாய் என்ற வகையில் செலுத்தப்படுகிறது. அவ்வகையில் இதுவரை மொத்தம் 13 தவணைகள் பிஎம் கிசான் பணம் விவசாயிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது. கடைசியாக பிப்ரவரி 26ஆம் தேதி பிஎம் கிசான் திட்டத்தின் 13ஆவது தவணைத் தொகை விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக செலுத்தப்பட்டது. இதையடுத்து 14ஆவது தவணைத் தொகைக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர். வரும் ஜூலை மாதத்துக்குள் 14ஆம் தவணை செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை (Apply)

  • https://pmkisan.gov.in/ இணையதளத்துக்கு செல்லவும்.
  • அதில் Farmers Corner பகுதிக்கு செல்லவும்.
  • New Farmer Registration பகுதியை கிளிக் செய்யவும்.
  • உங்கள் ஆதார் எண் பதிவிடவும்.
  • Click here to continue கிளிக் செய்யவும்.
  • அதன்பிறகு YES கிளிக் செய்து பிஎம் கிசான் பதிவு படிவத்தை பூர்த்தி செய்யவும்.
  • பூர்த்தி செய்த படிவத்தை save செய்து print out எடுத்துக் கொள்ளவும்

மேலும் படிக்க: Book My Show ஆட்சேர்ப்பு 2023 – உதவி மேலாளராக பணிப்புரிய உடனே விண்ணப்பிக்கவும்

தமிழ்நாட்டில் அதிக விளைச்சல் தரும் தென்னை ரகம் என்னென்ன?

தேவையான ஆவணங்கள்

  • ஆதார் அட்டை
  • நில ஆவணங்கள்
  • குடியுரிமை சான்று
  • வருமான சான்று
  • வங்கி கணக்கு விவரம்
  • மொபைல் எண்
  • பாஸ்போர்ட் சைஸ் போட்டோ

மேலும் படிக்க

PF வாடிக்கையாளர்களுக்கு உதவும் முக்கியமான 6 படிவங்கள்!

விவசாயிகளுக்கு பயன்படும் கிசான் கிரெடிட் கார்டு: பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)