1. Blogs

PF வாடிக்கையாளர்களுக்கு உதவும் முக்கியமான 6 படிவங்கள்!

R. Balakrishnan
R. Balakrishnan
PF Forms

EPFO நிறுவனம் இந்தியாவை சேர்ந்த ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி (PF), ஓய்வூதியம் (Pension) உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது. உலகின் மிகப்பெரிய சமூகப் பாதுகாப்பு நிறுவனங்களில் EPFO ஒன்றாகும்.

பிஎஃப் படிவங்கள் (PF Forms)

இந்தியர்களின் ரிட்டயர்மெண்ட் நிதி, பிஎப், பென்சன், இன்சூரன்ஸ் போன்றவற்றை EPFO நிறுவனம் நிர்வகித்து வருகிறது. EPFO பயனாளிகள் தங்களுக்கான ஆறு முக்கியமான படிவங்களை (Forms) பற்றி கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த ஆறு EPFO படிவங்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.

Form 10C: தொழிலாளர் பென்சன் திட்டத்தில் (EPS) நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் செலுத்திய பங்களிப்பு தொகையை பெற்றுக்கொள்வதற்கு இந்த படிவம் தேவை.

Form 10D: மாத ஓய்வூதியம் பெற வேண்டுமெனில் இந்த படிவம் தேவை.

Form 13: நீங்கள் ஒரு நிறுவனத்தில் இருந்து வேறு நிறுவனத்துக்கு மாறும்போது PF பணத்தை மாற்றுவதற்கு இந்த படிவம் தேவைப்படுகிறது.

Form 20: EPFO பயனாளி இறந்துவிட்டால் அவரது குடும்பத்தினர், வாரிசு அல்லது நாமினி இந்த படிவத்தை பயன்படுத்தி PF பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.

Form 31: EPF கணக்கில் உள்ள தொகையை எடுப்பதற்கும், கடனாக பெறுவதற்கும் இந்த படிவம் தேவைப்படுகிறது.

Form 51F: EPFO பயனாளி இறந்துவிட்டால் இன்சூரன்ஸ் திட்டத்தில் பணத்தை பெறுவதற்கு குடும்ப உறுப்பினர்கள், வாரிசு அல்லது நாமினி இந்த படிவத்தை பயன்படுத்த வேண்டும்.

மேலும் படிக்க

மூத்த குடிமக்களுக்கான சிறப்பு வைப்பு நிதி திட்டம்: கால அவகாசம் நீட்டிப்பு!

இரயில் டிக்கெட் புக் செய்ய புதிய வசதி: IRCTC அறிவிப்பு!

English Summary: 6 Important Forms to Help PF Customers! Published on: 10 April 2023, 04:40 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.