பிரதமரின் கிசான் சம்மான் யோஜனாவில், இதுவரை 3 லட்சம் விவசாயிகள் தங்கள் நில ஆவணங்களை உறுதி செய்து சரிபார்க்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 13-வது தவணை விரைவில் வழங்கப்பட உள்ள நிலையில், நில ஆவணங்கள் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ரூ.6,000
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா என்பது மத்திய அரசால் நடத்தப்படும் விவசாயிகளுக்கான திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 6000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது.
ரூ.2,000
ஒரு தவணைக்கு 2000 ரூபாய் என ஒரு ஆண்டில் மொத்தம் 3 தவணைகள் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரையில் மொத்தம் 12 தவணைகள் வழங்கப்பட்டு விட்டன. அடுத்து 13-வது தவணை எப்போது கிடைக்கும் என்று விவசாயிகள் காத்திருக்கின்றனர். அடுத்த தவணைப் பணம் விரைவில் விவசாயிகள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.
13-வது தவணை
உண்மையில், இந்த திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டின் முதல் தவணை ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரையிலும், இரண்டாவது தவணை ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30 வரையிலும் வழங்கப்படுவது வழக்கம். அதே நேரத்தில், மூன்றாவது தவணைக்கான பணம் டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரையிலான காலகட்டத்தில் வழங்கப்படுகிறது. அதன்படி, பிஎம் கிசான் திட்டத்தின் 13வது தவணை விரைவில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
3.6 லட்சம்
ஆனால் இந்தத் திட்டத்தில் பதிவு செய்துள்ள 19 லட்சம் விவசாயிகளில் ,3.6 லட்சம் பேர் இதுவரை தங்கள் ஆவணங்களைப் பதிவுசெய்யவில்லை என்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலஆவணங்களைப் பதிவு செய்யவில்லை என்பதால் தெரியவந்துள்ளதால், விவசாயிகள் தங்கள் ஆவணங்கள் சர்பார்க்கப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்யுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் படிக்க…
காய்கறி சாகுபடிக்கு ரூ.80,000 மானியம்- தொடர்பு தொலைபேசி எண்கள் அறிவிப்பு!