விவசாயிகளின் நிதிச்சுமையைக் குறைக்கும் வகையில், மத்திய அரசு வழங்கும் 6,000 ரூபாய் விரைவில் உயர்த்தப்பட உள்ளது. எவ்வளவு ரூபாய் உயர்த்தலாம் என மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
பட்ஜெட்
மத்திய அரசின் 2023ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் வரும் பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து அனைத்துத் துறை வல்லுநர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தி, அவர்களது கருத்துக்களைக் கேட்டறிந்து வருகிறார்.
ஆலோசனை
அண்மையில் நடைபெற்றக் கூட்டத்தில், விவசாயிகள், விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அப்போது, பிரதமரின் கிசான் திட்டத்தில் வழங்கப்படும் 6 ஆயிரம் ரூபாய் நிதியை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இதன் அடிப்படையில், பிரதமரின் கிசான் திட்டத்தில் வழங்கப்படும் நிதியை அதிகரிக்க மத்திய அரசுத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
கோரிக்கை
இதேபோல், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகையை உயர்த்தி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசிடம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிரதிநிதிகள் முன்வைத்துள்ளனர்.
மேலும் படிக்க...