1. கால்நடை

எருமையின் விலை ரூ.35 கோடியா!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
The price of this buffalo is Rs. 35 crores!

ஒரு எருமை மாட்டின் விலை ரூ.35 கோடி என்றால், நம்ப முடிகிறதா? நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். ஏனெனில் உண்மை அதுதான். ஐதராபாத்தில் நடைபெற்ற சதர் விழாவில் ரூ.35 கோடி மதிப்புள்ள எருமை பங்கேற்றது.

பிரம்மாண்ட விழா

தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் ஆண்டுதோறும் யாதவ சமுதாயத்தை சேர்ந்தவர்களால் தீபாவளியை ஒட்டி, சதர் விழா நடத்தப்படுவது வழக்கம். இதில், விலை உயர்ந்த எருமை மாடுகளை அதன் உரிமையாளர்கள் அழைத்து வருவார்கள்.

உழவர் கட்சி

இந்த விழா இந்தாண்டும் சிறப்பாக நடத்தப்பட்டது. இதற்காக, பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்காக ஐதராபாத்தை சேர்ந்த மது யாதவ் தலைமையில் நகராட்சி மைதானத்தில் உழவர் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் சதர் விழாவில் பங்கேற்பதற்காக மது யாதவ் எருமை மாடுகளை வாங்கி அவரது பால் பண்ணையில் வளர்த்து வருகிறார்.
இதில் பங்கேற்ற, மது யாதவ்-வின் ‘கருடன்’ என்ற எருமை அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. 20 நாட்களுக்கு முன்பு ஹரியானாவில் இருந்து ஹைமத் ஆலம்கானிடம் இருந்து ரூ.35 கோடி கொடுத்து இந்த 4 வயதான கருடன் எருமையை யாதவ் வாங்கியுள்ளார். தற்போது அதனை ஐதராபாத்திற்கு கொண்டு வந்ததுள்ளார். இதேபோல், அவரிடம் 10 எருமைகள் இருக்கிறது.

 

சிறப்பு அம்சம்

  • இந்த எருமைகளின் விந்தணுவின் தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

  • கருடன் எருமையின் விந்தின் ஒரு துளி ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை விற்பனை செய்யப்படுகிறது.

  • இதன்மூலம், இந்த பகுதியில் எருமைகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.

  • இந்த எருமைகளுக்கு பால், பிஸ்தா, பாதாம், முந்திரி, ஆப்பிள், கோழி முட்டை, கொண்டைக்கடலை, கடலைப்பருப்பு, வெந்தய விதைகள், வேர்க்கடலை, குஜார், பீட்ரூட் ஆகியவைதான் உணவாக வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க...

அரசு ஊழியர்களுக்கு 10% போனஸ் - தமிழக அரசு அறிவிப்பு!

வட்டியை உயர்த்திய வங்கி- வாடிக்கையாளர்களுக்கு அதிக லாபம்!

English Summary: The price of this buffalo is Rs. 35 crores! Published on: 27 October 2022, 10:46 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.