Farm Info

Thursday, 27 October 2022 11:55 AM , by: Elavarse Sivakumar

பிஎம் கிசான் திட்டத்தில் தமிழகப் பயனாளிகள் பட்டியலை வெளியிடாமல், அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகின்றனர். இது விவசாயிகளை அச்சமடையச் செய்துள்ளது.

ரூ.6,000

சாகுபடி சமயத்தில் விவசாயிகளின் நிதிச்சுமையைப் போக்கஉதவும் வகையில், பிஎம் கிசான் எனப்படும் பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ், நலிவடைந்த விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படுகிறது. இது 3 தவணைகளாக 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 வீதம் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இணையதளம்

இந்தத் திட்டத்தின் பயனாளிகளைச் சேர்ப்பதற்கென தனி இணையதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதற்கு தமிழக வேளாண்துறைக்கு வழங்கப்பட்டுள்ள ரகசியக் குறியீட்டைப் பயன்படுத்தி, விவசாயிகள் அல்லாத பலர், கடந்த அதிமுக ஆட்சியில் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், தமிழகத்தின் பயனாளிகள் பட்டியல் 40 லட்சத்தைத் தாண்டியது.

இதைஅறிந்து அதிர்ச்சி அடைந்த மத்திய அரசு, தகுதியற்ற பயனாளிகளை, பட்டியலில் இருந்து நீக்குமாறு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட தகுதியற்ற பயனாளிகள் அதிரடியாக பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.

இந்நிலையில் அண்மையில், 12-வது தவணையை பிரதமர் நரேந்திர மோதி விடுவித்தார். இது பயனாளிகள் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது. இதில் எத்தனைபேர் பயன்பெற்றனர் என்ற விபரத்தைத் தமிழக வேளண்துறையினர் இன்னும் வெளியிட வில்லை.  இதனால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

மேலும் படிக்க...

இந்த எருமையின் விலை ரூ.35 கோடி- பாதாம், பிஸ்தாதான் உணவு!

100% மானியத்தில் உளுந்து சாகுபடி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)