இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 8 September, 2022 10:46 AM IST

பிஎம் கிசான் திட்டத்தில் பயனாளிகளுக்கு அடுத்த கட்ட தொகை வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே கொடுக்கப்படும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனவே விவசாயிகள் கூடுதல் கவனம் செலுத்து, உங்கள் வங்கிக்கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

பொருளதார ரீதியில் நலிவடைந்த விவசாயிகளுக்கு உதவும் வகையில், ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் பிரதமரின் கிசான் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்படி தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம், 3 தவணைகளாக வழங்கப்படுகிறது. இந்தத் தொகை அவர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

செப்.15க்குள்

ஏற்கனவே 11 தவணைகள் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு விட்டன. பிரதான் மந்திரி கிஷான் யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு 12ஆவது தவணையை விரைவில் விடுவிக்கிறது. இது செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் நடைபெற சாத்தியக் கூறுகள் உள்ளன.

இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.2 ஆயிரம் வங்கிக் கணக்கில் ஆதார் எண் சமர்பித்து பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு மட்டும்தான் வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு ஆதார் எண் சமர்பிக்கப்பட்ட வங்கிக் கணக்கில் மட்டும் பணம் நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது. இது எதிர்க்கட்சிகளால் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

கண்டனம்

இது குறித்து காங்கிரஸ் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மத்திய அரசு தனது பணக்கார சொந்தங்கள் வாங்கிய கோடிக்கணக்கான கடனை தள்ளுபடி செய்கிறது. ஆனால் பிஎம் கிசான் யோஜனா திட்டத்தில் ரூ.2 ஆயிரம் பெற்ற விவசாயிகளிடம் உங்களுக்கு தகுதியில்லை என்று நோட்டீஸ் அனுப்பி கொடுத்த பணத்தை வசூலிக்கிறது. இது முற்றிலும் தவறானது. மத்திய அரசு முடிந்தால் தங்களது பணக்கார முதலாளிகளிக்கு கொடுத்த பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளட்டும் எனத் தெரிவித்துள்ளது.

புகார் அளிக்க

எனவே விவசாயிகள் கூடுதல் கவனம் செலுத்தி, தங்கள் வங்கிக்கணக்கு ஆதாருடன் இணைக்கப்பட்டுவிட்டதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
அதேநேரத்தில், பிரதமர் கிசான் யோஜனா திட்டம் குறித்து அறிந்து கொள்ள கட்டணமில்லா 155261 / 011-24300606 இந்தத் தொலைப்பேசி எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் படிக்க...

4 வயது குழந்தைகள் வேலைக்குத் தேவை - வித்தியாசமான விளம்பரம்!

பிள்ளையாருக்கு ரூ.316 கோடிக்கு காப்பீடு!

English Summary: PM Kisan: Episode 12 coming next week!
Published on: 08 September 2022, 10:46 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now