மத்திய அரசிடம் இருந்து விவசாயிகள் ஆண்டுக்கு 6000 ரூபாய் நிதியுதவிப் பெற வேண்டுமானால், இதை செய்ய வேண்டும். இல்லாவிட்டால், பணம் கிடைக்காது. எனவே விவசாயிகள் உடனடியாக இதனைச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (PM Kisan 11th Installment: PM Kisan Samman Nidhi Yojana) என்ற திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 6000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இது மூன்று தவணைகளாக தலா ரூ.2000 என பிரித்து வழங்கப்படுகிறது. இதுவரை 10 தவணைகள் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், 11ஆவது தவணைப் பணம் இன்னும் சில நாட்களில் வரவிருக்கிறது. இந்தத் தொகையை எதிர்பார்த்து சுமார் 12 கோடி விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
இந்தத் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறுவதற்கு விவசாயிகள் தங்களது இ-கேஒய்சி சரிபார்ப்பை முடிக்க வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மோசடியைத் தடுக்கும் விதமாகவும், சரியான பயனாளிகளுக்கு நிதியுதவி சென்று சேரவேண்டும் என்பதற்காகவும் இ-கேஒய்சி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அவ்வாறு சரிபார்ப்பை முடிப்பதற்கான கால அவகாசம் மே 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இ-கேஒய்சி எவ்வாறு செய்வது
-
முதலில், விவசாயிகள் பிஎம்-கிசான் இன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://pmkisan.gov.in/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.
-
பின்னர் முகப்புப் பக்கத்தில் உள்ள ‘இ-கேஒய்சி’ விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
-
ஒரு புதிய பக்கம் திறக்கும், அதில் பயனாளி விவசாயியின் ஆதார் எண், கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு தேடலை கிளிக் செய்ய வேண்டும்.
-
பின்னர் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடுமாறு கேட்கப்படும் இடத்தில், பொபைல் எண்ணை உள்ளிட்டவும்.
-
அதை உள்ளிட்ட பிறகு ‘ஓடிபி பெறவும்’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்
-
இப்போது, ஓடிபி ஐ உள்ளிட வேண்டும். இப்போது பிஎம்-கிசான் இ-கேஒய்சி சமர்ப்பிக்கப்பட்டு விடும்.
-
இந்த செயல்முறை தொடர்பான மேலும் விவரங்களுக்கு https://pmkisan.gov.in/ என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.
மேலும் படிக்க...
முட்டைக்குள்ளும் Diet இருக்கு- தெரியுமா உங்களுக்கு!
நோயாளி வயிற்றுக்குள் சிக்கிய கத்திரி- அறுவை சிகிச்சையில் நடந்த அலப்பறை!