1. Blogs

நோயாளி வயிற்றுக்குள் சிக்கிய கத்திரி- அறுவை சிகிச்சையில் நடந்த அலப்பறை!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Scissors stuck in the patient's abdomen - surgery closet!

மருத்துவத் தொழில் செய்பவர்கள், மற்றவர்களை விடக் கூடுதல் பொறுப்புமிக்கவர்களாக இருக்கவேண்டியது அவர்களதுக் கடமை. ஏனெனில், இந்தத் தொழில்,ஒரு உயிர் சார்ந்த விஷயம். ஆனாலும் சில வேளைகளில் பணிச்சுமை காரணமாக, சிலத் தவறுகள் நடப்பதைத் தடுக்க முடியாமல் போய்விடுகிறது. அப்படிதான் இங்கும் ஒரு வேடிக்கை நடந்தது. என்னவென்றால் நோயாளியின் வயிற்றில் கத்திரியை மறந்துவைத்துவிட்டனர் மருத்துவர்கள். அட இதுலகூடவா மறதி?

வெனிசுலா நாட்டில் நடந்த அறுவைசிகிச்சையில், கத்தியை மறந்து வயிற்றுக்குள்ளேயே வைத்து தைத்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்நாட்டில் உள்ள மாராகாபிப்பு பல்கலைகழக மருத்துவமனை மிகவும் புகழ்பெற்றது. இந்த மருத்துவமனைக்கு, வயிற்றுவலியால் அவதிப்பட்ட, இவான் சாவேஸ் என்ற இளைஞர் வந்துள்ளார்.

அவருக்கு மருத்துவப்பரிசோதனை நடத்திய மருத்துவர்கள், வயிற்றில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது அவசியம் எனப் பரிந்துரை செய்தனர். அதன்படி அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாகவே முடிவடைந்தது.ஆனால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு இவானால் சரியாக சாப்பிடவோ, மலத்தை வெளியேற்றவோ முடியவில்லை, சொல்ல முடியாத ஏதோ அசெளகரியம் அவருக்குள் இருந்துள்ளது. இதனால் அவர் மீண்டும் மருத்துவரை அணுகியபோது அவர்கள் சிகிச்சை அளித்தனர்.

அப்போதும் பிரச்னை தீராததால், மறுபடியும் வயிற்றை ஸ்கேன் செய்து பார்க்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். ஸ்கேன் ரிசல்டை பார்த்த போது தான் இவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் இவரது வயிற்றில் கத்திரிக்கோலை உள்ளேயே வைத்துத் தைத்துவிட்டது தெரியவந்தது.

உடனடியாக மீண்டும் அறுவைசிகிச்சை செய்து இவரது வயிற்றில் இருந்த கத்திரிக்கோலை மருத்துவர்கள் அப்புறப்படுத்தினர். இந்த அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாகவே முடிந்தது. ஆனால், அடுத்த 5வது நாள் இவான் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

மருத்துவர்களுக்கு எதிராக இவானின் குடும்பத்தினர் போர்க்கொடி தூக்கியதால், வயிற்றில் கத்திரிக்கோலை வைத்துத் தைத்த மருத்துவரை, அந்த மருத்துவமனை நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.
எது எப்படியிருந்தாலும், மருத்துவமும், நடந்த சம்பவங்களும் புரியாதப் புதிராகவே இருக்கிறது. இருப்பினும் இவானின் குடும்பத்தினருக்கு ஏற்பட்ட இழப்பை யார்தான் ஈடு செய்வது!

மேலும் படிக்க...

பிளாஸ்டிக் கவரில் ஊற்றிக் கொடுக்கும் சூடான உணவை சாப்பிடலாமா?

பழங்களின் தோல்களை வீசாதீர்கள்- இத்தனை ஊட்டச்சுத்துகள் இருக்கு!

English Summary: Scissors stuck in the patient's abdomen - surgery closet! Published on: 14 April 2022, 04:30 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.