PM-Kisan புதிய அப்டேட்! பயனாளிகளுக்கு வெளியான அறிவிப்பு!
பிஎம் கிசான் திட்டத்தில் தமிழகப் பயனாளிகள் பட்டியலை வெளியிடாமல், அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகின்றனர். இது விவசாயிகளை அச்சமடையச் செய்துள்ளது. விவசாயிகள் அல்லாத பலர், கடந்த ஆட்சியில் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், தமிழகத்தின் பயனாளிகள் பட்டியல் 40 லட்சத்தைத் தாண்டியது. இதைஅறிந்து அதிர்ச்சி அடைந்த மத்திய அரசு, தகுதியற்ற பயனாளிகளை, பட்டியலில் இருந்து நீக்குமாறு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட தகுதியற்ற பயனாளிகள் அதிரடியாகப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில் அண்மையில், 12-வது தவணையை பிரதமர் நரேந்திர மோதி விடுவித்தார். இது பயனாளிகள் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது. இதில் எத்தனைபேர் பயன்பெற்றனர் என்ற விபரத்தைத் தமிழக வேளண்துறையினர் இன்னும் வெளியிட வில்லை. இதனால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விழுப்புரத்தில் நடந்த விவசாயிகளுக்கான வேளாண் அறிவியல் கண்காட்சி!
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பல பகுதிகளில் இருந்து விவசாயிகள், தாவர ஆராய்ச்சியாளர்கள் வருகை புரிந்தனர். திண்டிவனத்தில் அமைந்துள்ள வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பாகக் கண்காட்சி திடல் அமைக்கப்பட்டிருந்தது. கண்காட்சியில் இயற்கை உரங்கள், இயற்கை திரவியங்கள், இயற்கை முறையில் வளர்ந்த மாஞ்செடிகள், கொய்யா செடிகள், உளுந்து விதைகள், நுண்ணூட்ட கலவைகள், உரங்கள் போன்ற பொருள்கள் இடம் பெற்றிருந்தன.
சம்பா நெல் பயிருக்குக் காப்பீடு செய்ய கடைசி தேதி அறிவிப்பு!
சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என ஈரோடு வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார். வருகின்ற நவம்பர் 15 ஆம் தேதி சம்பா நெல் பயிருக்குக் காப்பீடு செய்யக் கடைசி நாளாகும். ஈரோடு மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் Agricultural insurance company of India நிறுவனத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சம்பா நெல் பயிருக்குப் பிரீமியத் தொகையாக ஏக்கருக்கு 554.25 ரூபாய் செலுத்த வேண்டும். அறிவிக்கை செய்யப்பட்டுள்ள பிர்காக்களைச் சார்ந்த கடன் பெறும் விவசாயிகள், தாங்கள் பயிர் கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக தங்கள் விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் துறை அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு: தமிழக அரசு உத்தரவு!
முதன்மையான வேளாண் திட்டங்களான "கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்", முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டுத் திட்டம், தமிழ்நாடு நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம் மற்றும் மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் போன்றவை தமிழ்நாடு விவசாயிகளின் வாழ்வை வளம்பெறச் செய்யும் திட்டங்களாகும். மேலும் திட்ட பணிகள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்திற்குள் எவ்வித தொய்வுமின்றி செயலாக்க வேண்டியுள்ளதாலும், தொடர் கண்காணிப்பு தேவைபடுவதாலும், மாவட்டம் மற்றம் வட்டார அளவில் உள்ள வேளாண் அதிகாரிகளின் காலிப்பணிடங்கள் நிரப்பப்பட ஆணை பிறப்பிக்கப்பட்டு, தற்பொழுது வேளாண்மைத்துறையில் 23 துணை வேளாண்மை இயக்குநர்கள் வேளாண்மை இணை இயக்குநர்களாகவும், 40 வேளாண்மை அலுவலர்கள் வேளாண்மை உதவி இயக்குநர்களாகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது" என்று அறியப்படுகிறது.
தொடர்மழையால் நிரம்பிய கண்மாய்கள்: மகிழ்ச்சியில் விவசாயிகள்!
தொடர்மழை மற்றும் வைகையில் தண்ணீர் திறப்பு காரணமாக திருமங்கலம் தாலுகாவில் உள்ள பொன்னமங்கலம் கண்மாய் மற்றும் மேலேந்தல் கண்மாய்கள் நிரம்பியுள்ளதால், பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்தாண்டு பெய்த மழையால் பல்வேறு கண்மாய்கள் நிரம்பியதால் திருமங்கலம் பகுதியில் விவசாயம் அதிகளவில் நடைபெற்றது. அதே போல் இந்தாண்டும் கண்மாய்கள் நிரம்பி வருவதால் நெல், கரும்பு, சோளம், மக்காசோளம், பருத்தி பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோதுமை வளர்ப்பாளரான ஞானேந்திர பிரதாப் சிங் தேசிய தாவர மரபணு வளங்கள் பணியகத்தின் இயக்குநர் ஆனார்!
இவர் இதற்கு முன் இந்திய கோதுமை மற்றும் பார்லி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ICAR- NBPGR இன் முக்கிய செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கும், இந்திய விவசாயத்தில் ஏற்படும் காலநிலை மாற்றத்தின் பாதகமான விளைவுகளைத் தணிக்கும் புதிய நிலைகளை வழங்குவதற்கும் இவரது தலைமை என்பது முக்கியமானது.
கொல்லிமலை நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி!
கொல்லிமலையில் நீர்வீழ்ச்சிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி தெரிவித்துள்ளனர். கொல்லிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மலை குறைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அந்த பகுதிகளுக்கு செல்ல விதிக்கப்பட்ட தடையை நீக்கி அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் தெரிவித்துள்ளார். இந்த செய்தி நாமக்கல் மாவட்ட மக்கள் மட்டுமல்லாது பிற மாவட்ட மக்களின் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதோடு இந்த செய்தியை கேட்டு அப்பகுதி சிறு குரு வியாபாரிகளும் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க
இன்றைய வேளாண் தகவல்களும் மானியங்களும்!
PM-kisan பயனாளிகள் பட்டியல் - அதிர்ச்சியில் தமிழக விவசாயிகள்!