மத்திய அரசு சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் 2000 ரூபாய் தவணையை, வீட்டுக்கே நேரடியாக அனுப்புவதற்கான திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கும் 2000 ரூபாய் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இனி நேரடியாக வீட்டுக்கே 2000 ரூபாயை வழங்கும் திட்டத்தை இந்திய தபால் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
பிரதமர் கிசான்
விவசாயக் குடும்பங்களுக்கு வருமான ஆதரவு வழங்குவதற்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டம் (PM Kisan Samman Nidhi Yojana) கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா 6000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தத் தொகை மூன்று தவணைகளாக பிரித்து தவணைக்கு 2000 ரூபாய் என வழங்கப்படுகிறது.
கடந்த மே 31ஆம் தேதியன்று பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் 11ஆவது தவணையை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். இதன் கீழ் 10 கோடிக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு தலா 2000 ரூபாய் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
நேரடியாக பணம்
பிரதமர் கிசான் திட்டத்தின் சிறப்பு அம்சமே விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாக பணம் அனுப்பப்படுகிறது. எனவே, அவர்கள் பணத்துக்காக அரசு அலுவலகங்களுக்கு சென்று அலையத் தேவையில்லை. இடைத்தரகர்களின் அட்டூழியத்தைத் தடுக்கவே இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
வீட்டுக்கே வரும்
ஆனால், வங்கிக் கணக்கில் 2000 ரூபாய் அனுப்புவதே விவசாயிகளுக்கு பெரும் சவுகரியமாக இருந்து வருகிறது. இந்நிலையில், வீட்டுக்கே நேரடியாக 2000 ரூபாயை டெலிவரி செய்வதற்காக இந்திய தபால் துறை புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆப்கா பேங்க், ஆப்கே துவார்
இதற்காக ‘ஆப்கா பேங்க், ஆப்கே துவார்’ (Apka Bank, Apke Dwar) என்ற திட்டத்தை இந்திய தபால் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய பிரதமர் கிசான் 2000 ரூபாய் பணம் நேரடியாக வீட்டுக்கே வழங்கப்படும். தபால் ஊழியர்கள் இந்த பணத்தை வீட்டுக்கே டெலிவரி செய்வார்கள்.
மேலும் படிக்க...