மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 24 February, 2022 4:46 PM IST
PM Kisan Samman Nidhi Yojana: 1.82 lakh crore for farmers!

PM Kisan Samman Nidhi Yojana: பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம் தொடங்கி மூன்றாண்டுகள் நிறைவு பெற்றது. இவ்விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த திட்டம் சிறு விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருந்தது மேலும் இதன் லட்சக்கணக்கான விவசாயிகள் பயன்பெற்றுயிருப்பதாக கூறினார்.

இதன் கீழ், கிட்டத்தட்ட 11 கோடி விவசாயிகளுக்கு 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. ஒரே கிளிக்கில் 10 முதல் 12 கோடி விவசாயிகளின் கணக்குகளுக்கு நேரடியாக பணம் மாற்றப்படுகிறது. இந்த திட்டம் 24 பிப்ரவரி 2019 அன்று உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூரில் இருந்து முறையாக தொடங்கப்பட்டது. ஆனால் அதன் அதிகாரப்பூர்வமற்ற தொடக்கம் டிசம்பர் 1, 2018 முதல் தொடங்கப்பட்டது.

மத்திய அரசு ஆண்டுக்கு 14.5 கோடி பேருக்கு நிதி வழங்க விரும்புகிறது. ஆனால், இதுவரை 11.15 கோடி பயனாளிகள் மட்டுமே பயன்பெற்றிருப்பதாகவும், மூன்றாண்டுகளில் ரூ.1.82 லட்சம் கோடிக்கு மேல் பயனடைந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். தற்போது, ​​சுமார் 3 கோடி விவசாயிகள் பதிவு செய்யவில்லை அல்லது அவர்கள் நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என தோன்றுகிறது.

நீங்களும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

நீங்கள் வருமான வரி செலுத்துபவராக இல்லாவிட்டால், உங்களிடம் விளை நிலம் இருந்தால், அதில் பதிவு செய்யலாம். இத்திட்டத்தில், விவசாயிகள் குடும்பம் என்பது கணவன், மனைவி மற்றும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் குறிக்கிறது. கூடுதலாக, விவசாய ஆவணங்களுக்கு உரிமையுள்ள எவருக்கும் அதன் அடிப்படையில் தனி சலுகைகள் கிடைக்கும் என்பது குறிப்பிடதக்கது.

செய்தி: UKraine Crises: தமிழகத்தைச் சேர்ந்த 100 மாணவர்கள் உக்ரைனில் சிக்கித்தவிப்பு

இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்ய, சரிபார்க்க என பல சேவைகளுக்கான வழிமுறை:

  • நீங்கள் சரிபார்க்க வேண்டுமெனில், pmkisan.gov.in இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும்.
  • வலைத்தளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள மெனுவில் Farmers Corner என்பதை கிளிக் செய்யுங்கள்.
  • அங்கு கிடைக்கும் தொகுப்புகளில் Beneficiary List என்பதை தேர்வு செய்யுங்கள்.
  • பின் அதில் உங்கள் மாநிலம் , மாவட்டம், போன்ற விவரங்களை பூர்த்தி செய்யுங்கள்.
  • அனைத்து பூர்த்தி செய்யப்பட்ட பிறகு Get Report என்பதை கிளிக் செய்யுங்கள்.
  • அதில் உங்கள் பகுதியில் PM-Kisanல் இணைந்திருப்பவர்களின் முழு பட்டியலையும் காண முடியும்.
  • https://pmkisan.gov.in/Rpt_BeneficiaryStatus_pub.aspx - நேரடியாக பட்டியலை பார்க்க இதனை கிளிக் செய்யுங்கள்.

மேலும் படிக்க:

UKraine Crises: தமிழகத்தைச் சேர்ந்த 100 மாணவர்கள் உக்ரைனில் சிக்கித்தவிப்பு

இந்தியாவில் விதைகளை வாங்க, சிறந்த 5 இணையதளங்கள்

English Summary: PM Kisan Samman Nidhi Yojana: 1.82 lakh crore for farmers!
Published on: 24 February 2022, 04:41 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now