1. செய்திகள்

Ukraine Crises: தமிழகத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கி தவிப்பு

Deiva Bindhiya
Deiva Bindhiya
Ukraine Crisis: 100 students from Tamil Nadu trapped in Ukraine

உக்ரைனில் கொடைக்கானல் மாணவி அனுசியா சிக்கித்தவிப்பதாக அனுசியா தந்தை மற்றும் அவரது சகோதரி தெரிவித்திருக்கின்றனர். தொலைபேசி, இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

போரின் அச்சம் சூழ்ந்துள்ள உக்ரைனில் தமிழகத்தைச் சேர்ந்த நூறு மருத்துவ மாணவிகள் சிக்கித் தவிக்கின்றனர். ஏற்கனவே, குண்டுவீச்சில் 7 பேர் பலி என உக்ரைன் தகவல் தெரிவித்திருக்கிறது. உக்ரைனில் இந்தியா மக்கள் சுமார் இருபதாயிரம் பேர் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கான தொலைபேசி எண்கள் +91 11 23012113, +91 11 23014104

உக்ரைனுக்கு சென்ற ஏர் இந்தியா, நடுவானில் தத்தளித்து, டெல்லி திரும்பியது. இந்நிலையில் பெற்றோர்கள் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே, பெற்றோர்கள், ஓன்றிய அரசோ, தமிழ்நாடு அரசோ தனி விமானம், அனுப்பி மாணவிகளை மீட்கும் மாறு பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வியாழக்கிழமை (24-02-2022) உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை அறிவித்தார், அதாவது பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக உக்ரைன் மீது போர் தொடுக்கும் அறிவிப்பாக இது பார்க்கப்படும் வேளையில், “இது பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்டது” என்று புதின் கூறினார்.

இந்த அறிவிப்பை அடுத்து 82வது வான்வழிப் பிரிவைச் சேர்ந்த, அமெரிக்க இராணுவ வீரர்கள், நேட்டோ கூட்டாளிகளுக்கு உறுதியளிக்க போலந்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர், அர்லமோ போலந்துக்கு அருகிலுள்ள ஒரு விமான தளத்தில் படைகள் காணப்படுவது குறிப்பிடதக்கது.

புதின், ஒரு தொலைக்காட்சி உரையில் கூறும்போது, உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கம் ரஷ்யாவுக்கு இல்லை என்று குறிப்பிட்டார். இரத்தக்களறிக்கான பொறுப்பை உக்ரேனிய ஆட்சியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று உக்ரைனை எச்சரித்தார், புதின் என்பது குறிப்பிடதக்கது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வியாழக்கிழமை (24-02-2022) உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை அறிவித்தார், அதாவது பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக உக்ரைன் மீது போர் தொடுக்கும் அறிவிப்பாக இது பார்க்கப்படும் வேளையில், “இது பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்டது” என்று கூறினார் புதின்.

இந்த அறிவிப்பை அடுத்து 82வது வான்வழிப் பிரிவைச் சேர்ந்த அமெரிக்க இராணுவ வீரர்கள், நேட்டோ கூட்டாளிகளுக்கு உறுதியளிக்க போலந்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர், அர்லமோ போலந்துக்கு அருகிலுள்ள ஒரு விமான தளத்தில் படைகள் காணப்படுகின்றன.

ஒரு தொலைக்காட்சி உரையில், புதின் கூறும்போடு உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கம் ரஷ்யாவுக்கு இல்லை என்றும் அவர் கூறினார். இரத்தக்களறிக்கான பொறுப்பை உக்ரேனிய ஆட்சியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று உக்ரைனை எச்சரித்தார் புதின்.

ரஷ்ய நடவடிக்கையில் தலையிடும் எந்தவொரு முயற்சியும் "அவர்கள் பார்த்திராத விளைவுகளை" ஏற்படுத்தும் என்று புடின் மற்ற நாடுகளை எச்சரிக்கும் வகையில் கூறியிருந்தார்.

திங்களன்று பிரிவினைவாதப் பகுதிகளின் சுதந்திரத்தை புதின் அங்கீகரித்து, கிளர்ச்சிப் பகுதிகளுக்கு படைகளை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்தார்.

இதைத் தொடர்ந்து, கிளர்ச்சித் தலைவர்கள் புதினுக்கு புதன்கிழமை கடிதம் எழுதியதாக கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார், உக்ரேனிய ஷெல் தாக்குதலில் பொதுமக்களின் மரணம் மற்றும் முக்கிய உள்கட்டமைப்பு முடக்கப்பட்ட பின்னர் தலையிடுமாறு கேட்டுக் கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:

7th Pay Commission Update! மத்திய அரசு பணியாளர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.26,000...

SBI, HDFC, ICICI வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்: அது என்ன?

English Summary: Ukraine Crises: More than 100 students trapped in Tamil Nadu Published on: 24 February 2022, 02:20 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.