PM Kisan திட்டத்தில் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் மத்திய அரசு வரவு வைக்கும் தொகை உங்களுக்கு வருமா? வராதா? என்பதைத் தெரிந்துகொள்வது மிகவும் அவசியமான ஒன்று. இதனை இணையதளத்தின் உதவியுடன் எளிமையான முறையில் உறுதிசெய்துகொள்ள முடியும்.
PM kisan
விவசாயிகளுக்கு உதவும் நோக்கில் கடந்த 2018 ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்தத்திட்டம், 2019ம் ஆண்டு பிப்ரவரியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் குடும்பங்களுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது.
10 தவணை
டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியுடன் இணைந்து, நான்கு மாதங்களுக்கு ஒருமுறை மத்திய அரசு சார்பில், 2,000 ரூபாய், தகுதியுள்ள விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இதுவரை பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் 10 தவணைத் தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
11ஆவது தவணை
இந்த திட்டத்தின் 10-வது தவணையை ஜனவரி 1, 2022 அன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் வெளியிட்டார். இதையடுத்து 11வது தவணை விரைவில் விவசாயிகள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.
பிரதமர் கிசான் சம்மான் நிதியின் 11வது தவணைக்காக நாடு முழுவதும் உள்ள 12.50 கோடி விவசாயிகள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், விவசாயிகளுக்காக 11ஆவது தவணை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கே 2000 ரூபாய் அனுப்பப்படும்.
பணம் வருமா?
-
உங்களுக்கு 2000 ரூபாய் பணம் வருமா என்பதை எப்படி தெரிந்துகொள்வது?
-
https://pmkisan.gov.in/ இணையதளத்துக்கு செல்லவும்.
-
அதில் உள்ள 'Beneficiary Status' பிரிவை கிளிக் செய்யவும்.
-
அதில் ஆதார் எண், வங்கிக் கணக்கு எண், மொபைல் எண் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யவும்.
-
Get Data ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களுக்கு பணம் வருமா என்ற விவரத்தை தெரிந்துகொள்ளலாம்.
மேலும் படிக்க...
ரூ.1லட்சம் பென்சன் தரும் மத்திய அரசின் மகத்தானத் திட்டம்!
Indian Air Forceஸில் வேலை - பிளஸ் 2 படித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!