பிரதான் மந்திரி கிசான் உர்ஜா சுரக்ஷா மற்றும் உத்தன் மகாபியன் (PM-KUSUM) திட்டத்தின் கீழ், ஹரியானாவில் சோலார் வாட்டர் பம்பிங் சிஸ்டத்தை நிறுவுவதற்கு ஜனவரி 1ஆம் தேதி வரை 12,385 விண்ணப்பங்கள் வரவேற்க்கப்பட்டன. இதில் 11,876 விண்ணப்பங்கள் சரியானவை என கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் பல தகவல்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.
ஹரியானா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை முன்னுரிமை அடிப்படையில் 9142 பணி ஆணைகளை வழங்கியுள்ளது. மீதமுள்ள 2734 விவசாயிகள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். சில விவசாயிகள் ஆன்லைனில் பணம் செலுத்திய பிறகு மீண்டும் ஆன்லைனில் இறுதி சமர்பிக்கவில்லை அதாவது Finish button-ஐ கிளிக் செய்ய வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், அவர்களின் செயல்முறை முடிக்கப்படவில்லை என்று ஆர்த்தமாகும். இத்தகவலை ஃபரிதாபாத் மாவட்ட துணை ஆணையர் சத்பீர் மான் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ், அரசு 75 சதவீத தொகையை வழங்குகிறது, விவசாயிகள் 25 சதவீதத்தை மட்டுமே செலவிட வேண்டும்.
(PM-KUSUM) பிரதம மந்திரி குசும் யோஜனா திட்டத்தின் கீழ், சாரல் போர்ட்டலில் சோலார் நீர் இறைக்கும் முறைக்கு விண்ணப்பித்த மாவட்ட விவசாயிகள் செலுத்திய தொகைக்கான சான்று மற்றும் பிற ஆவணங்களை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என்று துணை ஆணைரயர் கூறினார். இந்த விவசாயிகளின் பட்டியலை கூடுதல் மாவட்ட துணை ஆணையர் அலுவலகத்திற்கு (ADC) சென்று பார்க்கலாம். இதில் ஆட்சேபனை இருப்பின் ஜனவரி 28ம் தேதிக்குள் கூடுதல் துணை கமிஷனர் அலுவலக அறை எண் 403ல் டெபாசிட் செய்யலாம்.
விவசாயிகள் உரிய நேரத்தில் தவறுகளை சரிசெய்ய வேண்டும் (Farmers need to correct mistakes in a timely manner)
துணை கமிஷனர் கூறியதாவது: தொழில்நுட்ப பிழை காரணமாக பணி ஆணை வழங்கப்படாமல், பயனாளிகளின் பங்குத்தொகையை டெபாசிட் செய்த விவசாயிகள், பட்டியலை சரியான நேரத்தில் பார்த்து தங்கள் தவறுகளை சரி செய்ய வேண்டும். இது தவிர, காத்திருப்போர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாதவர்களும், தவறுகளை சரி பார்த்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகே, விண்ணப்பங்கள் மீது ஹரியானா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையால் நடவடிக்கை எடுக்கப்படும்.
சோலார் பம்பிங் செட் மீது 75% தள்ளுபடி (75% discount on solar pumping sets)
மாநிலத்தில் சோலார் பம்பிங் முறையை ஊக்குவிக்க, பிரதமர் குசும் யோஜனா திட்டத்தின் கீழ் 75 சதவீதம் தள்ளுபடி அளிக்கிறார். 50 ஆயிரம் சோலார் பம்ப்செட்களை அமைக்க மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் 50 ஹார்ஸ்பவருக்கு குறைவான திறன் கொண்ட மின் குழாய் கிணறுகளும் சூரிய சக்தியாக மாற்றப்பட உள்ளது.
எத்தனை சோலார் பம்புகள் நிறுவப்பட்டுள்ளன? (How many solar pumps are installed?)
சூரிய சக்தியை ஏற்றுக்கொள்வதன் மூலம் டீசல் மற்றும் மின்சாரம் சேமிக்கப்படும். ஹரியானாவில் சுமார் 80 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில், 75 சதவீதம் பாசனம் செய்யப்படுகிறது. மீதமுள்ளவை பாசனத்திற்கு மழையை நம்பியே இருக்க வேண்டும். கடந்த ஏழு ஆண்டுகளில் 25,897 சோலார் பம்ப்செட்களை நிறுவியுள்ளதாக மாநில அரசு கூறுகிறது.
மேலும் படிக்க:
பென்சன் வரம்பு உயர வாய்ப்பு! விவரம் உள்ளே
தபால் அலுவலக சிறு சேமிப்புக் கணக்கை எவ்வாறு திறப்பது? தேவையானவை