Farm Info

Thursday, 13 August 2020 06:56 AM , by: Elavarse Sivakumar

Credit:DTNext

திருந்திய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் நெல், நிலக்கடலை, ராகி, துவரை பயிர்களுக்கு காப்பீடு செய்ய ஆகஸ்ட் 16ம் தேதி கடைசி நாள் என கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநராக பொறுப்பு வகிக்கும் ஜக்குல அகண்டராவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :

மத்திய அரசு 2020-21ம் ஆண்டு பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் (Pradhan Mantri Fasal Bima Yojana) சில மாற்றங்களைச் செய்து, புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தி உள்ளது.

அதன்படி, கடன் பெறும் விவசாயிகள், அவர்கள் விருப்பப்படி, பதிவு செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. பயிர் வாரியான சராசரி மகசூலின் அடிப்படையில் காப்பீட்டுத் தொகை நிர்ணயிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Credit: Employment News

அரசாணை அளிப்பு

கிருண்ஷகிரி மாவட்டத்தில் திருந்திய பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் காரீப் 2020 செயல்படுத்த அரசாணை வழங்கப்பட்டுள்ளது.

காரீப் பருவ நெல், ராகி, சோளம், துவரை, உளுந்து, பச்சை பயறு, நிலக்கடலை மற்றும் பருத்தி பயிர்களுக்கு அறிக்கை செய்யப்பட்ட காப்பீட்டு கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ், கடன் பெறும் விவசாயிகள், கடன் பெறா விவசாயிகள், இத்திட்டத்தைச் செயல்படுத்தும் அக்ரிகல்சா் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிட் (Agriculture Insurance Company of India Ltd) நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள், பொது சேவை மையங்கள், வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.

ஏக்கருக்கு அதிகபட்ச இழப்பீடாக நெல்லுக்கு ரூ.33,100ம், ராகி பயிருக்கு ரூ.9,300, பச்சை பயறு, துவரை மற்றும் உளுந்து பயிருக்கு ரூ.12,810, நிலக்கடலைக்கு ரூ.18,700, பருத்திக்கு ரூ.23,550 வழங்கப்படும்.

இத்திட்டத்தில் விதைப்பு முதல் அறுவடை வரையில் உள்ள பயிர்க் காலத்துக்கும் அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்புகளுக்கும் வருவாய் கிராம வாரியாக சோதனை செய்து, இழப்பின் அளவை கணித்து காப்பீடு வழங்கப்படும்.

ஆகஸ்ட் 16ம் தேதி

நெல், ராகி, சோளம், துவரை, நிலக்கடலை ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்ய ஆகஸ்ட் 16ம் தேதி கடைசி நாளாகும்.

செப்டம்பர் 15ம் தேதி

இதேபோல் உளுந்து மற்றும் பச்சை பயிர்களுக்கு காப்பீடு செய்ய செப்டம்பர் 15ம் தேதி கடைசி நாளாகும். எனவே, விவசாயிகள் கணினி மையங்களுக்குச் சென்று நெற்பயிருக்கு காப்பீடு செய்ய ஏக்கருக்கு ரூ.662ம், உளுந்து, துவரை மற்றும் பச்சை பயிர்களுக்கு ரூ.256.20, ராகி பயிருக்கு ரூ.156, நிலக்கடலை பயிருக்கு ரூ.374, பருத்தி பயிருக்கு ரூ.1,177.50 செலுத்தி இத்திட்டத்தில் தங்களது பயிரினை காப்பீடு செய்து கொள்ளலாம்.

தேவைப்படும் ஆவணங்கள் (Required Documents)

இத்திட்டத்தில் இணைய விரும்புவோர்

  • சிட்டா

  • அடங்கல் 

  • வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல்

  • மார்பளவு புகைப்படம்


போன்ற ஆவணங்களை பதிவேற்றம் செய்து, பயிர்க் காப்பீடு திட்டத்தில் இணைந்து பயன் பெற வேண்டும்.

மேலும் படிக்க...

கொட்டித் தீர்க்கும் பருவமழையால், கிடுகிடுவென நிரம்பும் அணைகள்- கரையோர மக்களுக்கு காத்திருக்கிறது அபாயம்!

UYEGP : 5% முதலீடு செய்தால் போதும்! அரசின் 25 % மானியத்துடன் நீங்களும் முதலாளி ஆகலாம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)