1. விவசாய தகவல்கள்

மானாவாரி துவரையில் அதிக மகசூல் பெற வேண்டுமா? வேளாண்துறை அளிக்கும் ஆலோசனைகள்!!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
High yield in Thuvarai cultivation

Credit: Vivasayam

தேசிய பயிர் பெருக்கம் திட்டத்தின் கீழ் துவரையை சாகுபடி செய்யும்போது மேற்கொள்ளவேண்டிய வழிமுறைகள் குறித்து வேளாண்துறை சார்பில் தமிழக விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி வட்டார வேளாண் துறை உதவி இயக்குநர் கண்ணன் அளித்துள்ள ஆலோசனையில், கிருஷ்ணகிரியில் 1500 ஏக்கரில் துவரை சாகுபடி (cultivation)செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பயறு வகை பயிர் பெருக்கம் 2020-21 திட்டத்தில் செயல்விளக்கத்திடல் அமைப்பதற்கான விவசாயிகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

விதை பராமரிப்பு (Sead Care)

சான்று பெற்ற விதைகளைப் பயன்படுத்தி, சரியான பயிர் எண்ணிக்கையை பராமரிக்க வேண்டும்.

Credit: Tamil Health Beauty

விதை நேர்த்தி

விதைப்பதற்கு முன்தினம், ஒரு ஏக்கரில் 8 கிலோ விதைகளை, விதை நேர்த்தி செய்ய வேண்டும். அதாவது 16 கிராம் கார்பென்டாசிம் அல்லது 80 கிராம் சூடாமோனாஸ் சேர்த்து அரிசிக் கஞ்சியுடன் விதை நேர்த்தி செய்து, விதைப்பதன் மூலம், விதைத் தாக்குதலைத் தவிர்க்கலாம்.

ஒரு பொட்டலம் அசோஸ்பைரில்லம், ஒரு பொட்டலம் பாஸ்போபாக்டீரியா கலந்து விதை நேர்த்தி செய்வதன் மூலம் 10 மூட்டைத் தழைச்சத்தினை இலவசமாகப் பெறலாம்.

இயற்கை விவசாயம் செய்பவராக இருந்தால், Urea potash DAP போன்ற chemicalsளுக்கு மாற்றாக Potassium humate, sea weed extract, AMINO acids போன்றவைகளை பயன்படுத்தலாம்.

ஊடுபயிர் (Intercropping)

உளுந்து, நிலக்கடலை ஆகியவற்றை ஊடுபயிராகப் பயிரிட்டு கூடுதல் லாபம் பார்க்கலாம்.

உரம் (Fertilizers)

ஏக்கருக்கு 5 டன் தொழு உரம் இட வேண்டும். மண் பரிசோதனை பரிந்துரைப்படி அல்லது ஏக்கருக்கு 2.5 கிலோ யூரியா, 22 கிலோ டி.ஏ.பி மற்றும் 8.5 கிலோ பொட்டாஷ் உடன் 4 கிலோ கந்தகச்சத்து ஆகியவற்றை விதைப்பிற்கு முன்பு இடவேண்டும்.

இந்த ஆலோசனைகளைப் பயன்படுத்தி விவசாயிகள் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் படிக்க...

பயிர் பாதுகாப்பு மருந்துகளைப் பயன்படுத்துகிறீர்களா? அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்!!

மழைக்காலங்களில் பாம்புகளின் நடமாட்டம் அதிகரிக்கும் -விவசாயிகள் கவனத்திற்கு!

English Summary: Agriculture advice to get higher yields during the rainy season!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.