Farm Info

Friday, 04 September 2020 06:10 AM , by: Elavarse Sivakumar

ஆனைமலை ஒன்றியப் பகுதிகளைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகள் ஆனைமலை ஒன்றியப் பகுதிகளில் சொட்டு நீர் பானம் அமைக்க 100 சதவீதம் மானியம் பெற விண்ணப்பிக்குமாறு வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலைஅடிவாரத்தில் அமைந்துள்ளது ஆனைமலை ஒன்றியம். இயற்கை எழில் சூழ்ந்த இந்த பகுதியில் அதிகளவில் விவசாயம் செய்யப்படுகிறது.  

விவசாயத்திற்கு மத்திய அரசின் பிரதமரின் நுண்ணீர்ப் பாசனத் திட்டம் (Prime Minister Krishi Sinchayee Yojana PMKSY)மூலம் இந்த மானியம் வழங்கப்பட உள்ளது.

இந்த  மானியம் பெறுவது தொடர்பாக, ஆனைமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஜமுனாதேவி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

Credit : Justdail

  • சொட்டு நீர் பாசனம் அமைக்க, 1,400 ஏக்கருக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீதத்திலும், இதர விவசாயிகளுக்கு, 75 சதவீதம் மானியத்திலும் சொட்டு நீர் பாசனம் அமைத்து கொடுக்கப்படுகிறது.

  • சொட்டு நீர் பாசனம் அமைத்து, ஏழாண்டுக்கு மேலான விவசாயிகள், புதியதாக அரசு மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்கலாம்.

  • மேலும், துணை நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ், சொட்டு நீர் பாசனம் குழாய் அமைக்க குழி தோண்டுவதற்கு ஹெக்டேருக்கு, மூவாயிரம் ரூபாய் மானியம் பெறலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

மானிய விலையில் நெல் விதைகள் - வாங்கிப் பயனடைய உடுமலை விவசாயிகளுக்கு அழைப்பு!

சாணத்தில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரிக்க நீங்க ரெடியா? எளிய வழிமுறைகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)