ரூ.50க்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் மலிவு கட்டண மருத்துவமனை - மத்திய அரசின் மகத்தானத் திட்டம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Credit: My Mysuru

நம் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றோடு மருந்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டியது தற்போது கட்டாயமாகிவிட்டது. ஏனெனில் அந்த அளவுக்கு நோய்களும் நம்மில் வாழத் தொடங்கிவிட்டன.

அவ்வாறு, வாட்டி வதைக்கும் கொடிய நோய்களுக்கு உயர்தர சிகிச்சை என்பது ஏழை எளிய மக்களுக்கும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கும் எட்டாக்கனி. அவர்கள் மட்டுமல்ல, உயிர்க்கொல்லி நோயால் பாதிக்கப்படும் மக்கள் பலரும், லட்சக்கணக்கில் செலவு செய்ய முடியாமல், தங்கள் இன்னுயிரை இழக்கிறார்கள். 

இதனைத் தடுக்கும் வகையில், மத்திய அரசு Pradhan Mantri Bhartiya Janaushadhi Pariyojana (PMBJP) என்றத் திட்டத்தை கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தியது.
நவம்பர் 2016ல் இத்திட்டத்தின் பெயர் பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஔஷதி பரியோஜனா (PMBJP)என மாற்றப்பட்டது. இத்திட்டத்தின்படி நாடு முழுவதும் 3000க்கும் மேற்பட்ட ஜன் ஆயுஷ் எனப்படும் ஔஷத மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அதில் 202 மருந்தகங்கள் தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

மலிவுக் கட்டண மருத்துவமனை (Low fees )

இந்தத் திட்டத்தின் அடுத்த கட்டமாக மலிவு விலை மருத்துவமனைகளும் நாடு முழுவதும் தொடங்கப்பட்டு வருகின்றன. இங்கு உயர்தர சிகிச்சைகளும் மலிவு விலையில் அளிக்கப்படுகின்றன.

திட்டத்தின் நோக்கம் (Target)

ஏழை எளிய மக்களுக்கும் சிறந்த மருந்துகள், குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம். இதன் மூலம் உள் நாட்டில் மருந்து உற்பத்தி அதிகரிக்கும். மக்களுக்கும் குறைந்த விலையில் மருந்துகளும் கிடைக்கும்.

Affordable Hospital for Medical Treatment

ஜெனிரிக் மருந்து

நாடு முழுவதும் உள்ள ஜன் ஆயுஷ் கடைகளில் இந்த குறைந்த விலை ஜெனிரிக் எனப்படும் பிராண்ட் வகை (Brand) மருந்து வகைகள் கிடைக்கும்.

எப்படித் தொடங்குவது? (How to start)

இந்தியக் குடிமகன் யார் வேண்டுமானாலும், ஜன் ஔஷதி மருந்து கடை ஆரம்பிக்க முடியும். சுய தொழிலாகவும் செய்து சிறு வருமானம் ஈட்ட முடியும்.

ஆரம்பிக்க என்ன தேவை? (Qualification)

சொந்தமாக ஒரு கடை அல்லது லீஸ் முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒரு கடை.

கடையின் அளவு குறைந்தது 120 சதுர அடிகள் இருக்க வேண்டும்.

கணினி அறிவுடன் கூடிய மருந்தாளுனர் ஒருவரை வேலையில் சேர்த்ததற்கான ஆதாரம் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம்.

ஆரம்பிப்பவர் SC / ST பிரிவை சேர்ந்தவர் அல்லது மாற்று திறனாளியாக இருந்தால் அதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கபட வேண்டும்.

சலுகைகள் 

முதலில் இந்த கடையை நீங்கள் ஆரம்பிக்க மத்திய அரசு 2.5 லட்சம் வரை கடன் உதவி வழங்கும்.

விற்கும் மருந்துகளுக்கு MRP இல் இருந்து (வரி இல்லாமல்) உங்களுக்கு 20% வழங்கபடும்.
மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்களை பெற http://janaushadhi.gov.in/ என்ற இணைய முகவரிக்கு செல்லுங்கள்.

மலிவு விலை மருத்துவமனை (low cost Hospital)

இந்தத்திட்டத்தின்படி தமிழகத்தின் முதல் மலிவு கட்டண மருத்துவமனை, கோவையில் துவக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சார்பில், இ.வி.எஸ். என்ற தனியார் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்த மலிவு கட்டண மருத்துவமனை, கோவை சித்தாபுதுாரில் துவக்கப்பட்டுள்ளது.

Credit: Samayam Tamil

ரூ.50 மட்டுமே கட்டணம் (Only Rs.50)

இந்த இ.வி.எஸ் மருத்துவமனையில், குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவர், பொது மருத்துவர், நரம்பியல் நிபுணர், காது மூக்கு தொண்டை நிபுணர், நீரிழிவு நோய் நிபுணர், மகளிர் நோயியல் மற்றும் மகப்பேறியல் மருத்துவர், மூட்டு மற்றும் இருதய நோய் நிபுணர் என.. சிறப்பு மருத்துவர்கள் உள்ளனர்.

மருத்துவக் கட்டணம் (Medical Bill)

நோயாளிகளுக்கான மருத்துவ கட்டணம், 50 ரூபாய் மட்டுமே.
காலை 8.30 முதல் மதியம் 1.30 மணி வரையும், மாலை 4.30 முதல் இரவு 9.30 மணி வரையில் நோயாளிக்கு சிகிச்சை வழங்கப்படும்.

ஸ்கேன் வசதி (Scan)

சலுகை கட்டணத்தில் ஸ்கேன் மற்றும் எக்ஸ்-ரே வசதிகளுக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளுடன், ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.இந்த மருத்துவமனையில், 'ஜன் ஔஷாதி' எனும் பெயரில் மருந்தகமும் உள்ளது. இதில், பொதுவான அனைத்து மருந்துகளும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும் படிக்க...

7ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேப் பேருந்து சேவை- தமிழக முதல்வர் அறிவிப்பு!

எஃப்டிக்கு வங்கிகளை விட அதிக வட்டி தரும் அஞ்சலக சேமிப்பு- விபரம் உள்ளே!

English Summary: Affordable Hospital for Medical Treatment for Rs.50 - Central Government's Massive Plan! Published on: 03 September 2020, 04:00 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.