Farm Info

Wednesday, 04 November 2020 08:58 AM , by: Elavarse Sivakumar

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

  • சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர்ப் பாசனம் போன்ற நுண்ணீர்ப் பாசன அமைப்புகளை உருவாக்க சிறு, குறு விவசாயிகளுக்கு முழு மானியமும், பிற விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியமும் அளிக்கப்பட்டு வருகிறது.

  • இத்திட்டத்தின் கீழ், நுண்ணீ ர்ப் பாசன முறைக் க வழங்கப்படும் மானியம் மட்டுமல்லாமல், குழாய் கிணறு துளைக் கிணறு அமைக்கவும் நீரை இறைப்பதற்கு ஆயில் இன்ஜின், மின்மோட்டார் வசதி ஏற்படுத்தவும், மானியம் வழங்கப்படுகிறது.

  • இதேபோல பாசன நீரை வீணாக்காமல் வயலுக்கு அருகில் கொண்டு செல்வதற்கும் மானியம் பெறலாம்.

  • மேலும், விவரங்களுக்கு, வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகிக் கூடுதல் தகவல்கள் பெற்று பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)