1. விவசாய தகவல்கள்

மழைக்காலங்களில் வயல்வெளியில் படைபெயடுக்கும் பாம்புகள்- எச்சரிக்கை அவசியம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Snakes that roam the field during the rainy season - Caution is required!

மழைக்காலங்களில் வயல்வெளிகளில் நாகப்பாம்பு, கட்டுவிரியன் உள்ளிட்ட பாம்புகள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும் என்பதால், விவசாயிகள் சற்று விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

உலகளாவிய சுற்றுச்சூழலியல் தொடர்பாக இ-லைஃப் பத்திரிகை சார்பில் (e-Life Journal) அண்மையில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், கடந்த 2000-வது ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், மொத்தம் 12 லட்சம் இந்தியர்கள் பாம்புக்கடிக்கு தங்கள் இன்னுயிரை இழந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 30 முதல் 69-க்கு இடைப்பட்ட வயதுடையவர்கள். அதிலும் குறிப்பாக பாதிக்கும் மேற்பட்ட பாம்புக்கடி சம்பவங்கள், குறிப்பாக ஜூன் முதல் செப்டர்மர் வரையிலான மாதங்களில் நிகழ்ந்துள்ளன.

உயிர்பறித்தப் பாம்புகள் (Snake bites)

இவர்களில் பலருக்கு காலிலேயே, பாம்புக் கடித்துள்ளது. குறிப்பாக நாகப்பாம்பு, கட்டுவிரியன் போன்ற அதிக விஷம் கொண்ட பாம்புகளின் கடிக்கு ஆளாகியே இவர்கள் மரணம் அடைந்துள்ளனர்.

சிகிச்சைக் கிடைக்கவில்லை (Loss of Treatment)

பலியானவர்களில் பெரும்பாலானோருக்கு, முறையான சிகிச்சைக் கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் வசித்த பகுதிகளில், ஆரம்ப சுகாதார மையங்கள் அருகில் இல்லாததும், மரணத்திற்கு மற்றுமொரு காரணமாக அமைந்திருக்கிறது.

பாம்பின் இயல்பு (Snakes Habit)

ஏனெனில் மழைக்காலங்களில் பாம்புகள் வசிக்கும் புற்றுகளுக்குள், தண்ணீர் செல்வதால், அவற்றின் வாழ்விடம் பாதிக்கப்படுகிறது.தங்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்படுவதால், தன் வசிப்பிடத்தை விட்டு வயல்வெளிக்கு பாம்புகள் வர நேர்கிறது. எனவே இந்த காலகட்டத்தில் விவசாயிகள் கூடுதல் கவனத்துடனும், விழிப்புடனும் இருக்குமாறு ஆய்வாளர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

மேலும் படிக்க...

6 பூச்சிக் கொல்லிகளுக்கு இடைக்காலத் தடை - தமிழக அரசு திடீர் உத்தரவு!

நெல் சாகுபடியில் இலைச்சுருட்டு புழுத் தாக்குதல் - கட்டுப்படுத்த எளிய வழிகள்!

English Summary: Snakes that roam the field during the rainy season - Caution is required!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.