இந்தியாவின் கரிமச் சந்தை 17 சதவீதம் வளர்ச்சி கண்டு வருகிறது. வரும் காலங்களில் இது மேலும் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான் மற்றும் ஆந்திரப் பிரதேச விவசாயிகள் அதிக அளவில் இயற்கை விவசாயத்திற்குத் திரும்புவதற்கு இதுவே காரணமாகும். இயற்கை விவசாயம், பாரம்பரிய விவசாயம் மற்றும் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள விவசாயிகளை அரசு ஊக்குவித்து வருகிறது.
சமீபத்தில் தான், பிரதமர் நரேந்திர மோடி, இயற்கை விவசாயத்தை மேற்கொள்ளுமாறு, விவசாயிகளை அறிவுறுத்தினார். ஆனால் இந்தியாவில் 3 சதவீத விவசாயிகள் கூட இயற்கை முறையில் விவசாயம் செய்வதில்லை என்பது குறிப்பிடதக்கது. 2015-16 விவசாயக் கணக்கெடுப்புத் தரவுகளின் படி, மேலும் 2018-19க்கான மதிப்பீடுகளின்படி, இந்தியாவில் 15.11 கோடி நில உரிமையாளர்கள் உள்ளனர்.
இயற்கை விவசாயிகள் (Organic Farmers Details)
நடப்பு மாதத்தில், இந்தியாவில் 2020-21ல் 43 லட்சத்து 38 ஆயிரத்து 495 விவசாயிகள் இயற்கை விவசாயம் செய்கிறார்கள் என்று விவசாய அமைச்சகம் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியது. இதில், அதிகபட்ச விவசாயிகள் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் (7 லட்சத்து 73 ஆயிரத்து 902). இது தவிர உத்தரகாண்ட், ராஜஸ்தான், ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் இயற்கை விவசாயத்தின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. 38.09 லட்சம் ஹெக்டேர் பகுதி கரிம சான்றிதழின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக தி இந்து பிசினஸ் லைன் அறிக்கை கூறுகிறது.
2016-17 நில பயன்பாட்டு புள்ளிவிவர அறிக்கையின்படி, இந்தியாவின் மொத்த புவியியல் பரப்பளவு 328.7 மில்லியன் ஹெக்டேர் ஆகும், இதில் 139.4 மில்லியன் ஹெக்டேர் மொத்த விதைக்கப்பட்ட பகுதி மற்றும் 200.2 மில்லியன் ஹெக்டேர் மொத்த பயிர் பரப்பு பகுதி ஆகும். மொத்த விதைக்கப்பட்ட பரப்பளவு மொத்த புவியியல் பரப்பில் 42.4 சதவீதம் ஆகும். நிகர பாசனப் பரப்பு 68.6 மில்லியன் ஹெக்டேர் ஆகும். இந்த புள்ளிவிவரங்களை நாம் பார்த்தால், இயற்கை விவசாயத்தின் கீழ் பயன்படுத்தப்படும் நிலம் மிகவும் குறைவாக உள்ளது.
இயற்கை விவசாயத்தில் இந்தியா முதலிடத்தில் உள்ளது(India is a leader in Natural Agriculture)
உலக சந்தையில் ஆர்கானிக் பொருட்களின் ஏற்றுமதியை இந்திய அரசு ஊக்குவித்து வருகிறது. ஆனால் ஏற்றுமதி இன்னும் குறைவாகவே உள்ளது. அமைச்சகத்தின் கூற்றுப்படி, கரிம விவசாயிகளின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்திலும், இயற்கை விவசாயத்தின் கீழ் பரப்பளவில் ஒன்பதாவது இடத்திலும் உள்ளது. சிக்கிம் முற்றிலும் இயற்கையாக மாறிய உலகின் முதல் மாநிலமாகும். அரசு தரவுகளின் படி திரிபுரா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களும் இதேபோன்ற இலக்குகளை நிர்ணயித்துள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டு சந்தையில் ஆர்கானிக் பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளதாக வேளாண் அமைச்சகம், இந்த ஆண்டு மார்ச் மாதம் மக்களவையில் சுட்டிக்காட்டியது. ASSOCHAM-EY இன் கூட்டு ஆய்வின்படி, உள்நாட்டு கரிமச் சந்தை 17 சதவீத விகிதத்தில் வளர்ந்து வருகிறது மற்றும் கரிம உணவு சந்தையின் தேவை, 2016 இல் 533 மில்லியனில் இருந்து 2021 இல் 871 மில்லியனைத் தாண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கான அரசு நிதி உதவி (Government financial assistance to Farmers)
அரசு 2015-16 முதல் பரம்பரகத் கிரிஷி விகாஸ் யோஜனா (PKVY) மற்றும் வடகிழக்கு பிராந்தியத்திற்கான மிஷன் ஆர்கானிக் மதிப்பு சங்கிலி மேம்பாடு (MOVCDNER) மூலம் இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து வருகிறது. இரண்டு திட்டங்களும் கரிம விவசாயிகளுக்கு உற்பத்தியிலிருந்து சான்றிதழ் மற்றும் சந்தைப்படுத்தல் வரையிலான ஆதரவை வலியுறுத்துகின்றன. மேலும், இயற்கை விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், பயிர் அறுவடை மேலாண்மை ஆதரவு, செயலாக்கம், பேக்கிங் மற்றும் சந்தைப்படுத்தல் உள்ளிட்டவை இந்தத் திட்டங்களின் ஒருங்கிணைந்த பகுதியாக மாற்றப்பட்டுள்ளன.
PKVY இன் கீழ், விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு 50,000 ரூபாய் வீதம் மூன்று ஆண்டுகளுக்கு அரசு, நிதியுதவி வழங்குகிறது. இதில், உயிர் உரங்கள், பூச்சிக்கொல்லிகள், அங்கக உரம், உரம், மண்புழு உரம் ஆகியவற்றின் விலைக்கான மானியம் ரூ.31,000 (61 சதவீதம்) டிபிடி மூலம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக அனுப்பப்படுகிறது.
மேலும் படிக்க: