தமிழக அரசு நாட்டுக் கோழி வளர்ப்பினை ஊக்குவிக்கும் வகையில் நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்த நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தின் கீழ் நாட்டுக் கோழிப் பண்ணை அமைக்க அரசு குறைந்த வட்டியில் கடன்களை வழங்குகிறது. அந்த கடன்களை எவ்வாறு பெறலாம் என்பதைக் குறித்து இப்பதிவு விளக்குகிறது.
அரசு, விவசாயிகளுக்கு எனப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில் கால்நடை வளர்ப்புக்கு எனப் பல சலுகைகளையும் மானியங்களையும் வழங்கி வருகின்றது. கால்நடை வளர்ப்பில் குறிப்பிடத்தக்க வகையாகக் கோழி வளர்ப்பு இருக்கின்றது.
தற்போது உள்ள சூழலில் இறைச்சி அதிக அளவில் விற்கப்பட்டு வருகிறது. இறைச்சிக்கான தேவையும் அதிகமாக இருக்கின்றது. இந்நிலையில் கோழி வளர்ப்பில் ஈடுபட்டால் அதிக லாபத்தினைப் பெறலாம். அதிலும் குறிப்பாக நாட்டுக் கோழி என்றால் அதிக அளவில் விற்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே, அரசு தரும் மானியம் மற்றும் கடன்களைப் பயன்படுத்திக் குறைந்த செலவில் அதிக லாபம் பெறும் கோழி வளர்ப்பை மேற்கொள்ளலாம்.
மேலும் படிக்க
பெண்களுக்கு ரூ. 6000 கிடைக்கும் மத்திய அரசின் திட்டம்: இன்றே அப்ளை பண்ணுங்க!
50% மானியத்தில் நெல் அறுவடை இயந்திரம் பெறுவது எப்படி?
கோழி வளர்ப்பு கடன் திட்டம்
கோழி வளர்ப்பு கடன் திட்டத்தின் கீழ், கால்நடை உரிமையாளர்களுக்குக் கடன் வழங்கப்படுகிறது. இந்த கடனில் மானியமும் உள்ளது என அறியப்படுகிறது. இதில் கோழிப்பண்ணையாளருக்குக் குறிப்பிட்ட தொகை வழங்கப்படும். மீதமுள்ள தொகையை அரசு வங்கியில் இருந்து வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவையான ஆவணங்கள்
- புகைப்படம்
- வங்கிக் கணக்குப் புத்தகம்
- ஆதார் கார்டு
- இருப்பிடச் சான்று
மேலும் படிக்க
பெண்களுக்கு இலவசத் தையல் இயந்திரம் தரும் மத்திய அரசு! இன்றே விண்ணப்பியுங்கள்!!
தினமும் 7 ரூபாய் சேமித்து 60,000 பென்சன் பெறும் சூப்பர் திட்டம்!
கடனை எப்படி பெறுவது?
- ஏதேனும் வங்கியில் இணைய வேண்டும்.
- அங்கு படிவம் இருக்கும் அதை நிரப்புதல் வேண்டும்.
- ஆவணங்களின் நகல்களை இணைத்தல் வேண்டும்.
- அதன்பிறகு, வங்கி ஆவணங்களை உறுதிசெய்து கடனுக்கான அனைத்து வழிவகைகளையும் செய்யும்.
எனவே, விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துப் பயன்பெறுங்கள்.
மேலும் படிக்க
விவாசாயிகளுக்கு 3% மானியத்தில் கடன் வழங்கும் புதிய திட்டம்!
Khelo India 2022: இந்த விளையாட்டின் வெற்றியாளனுக்கு ரூ.40 லட்சம் பரிசு!