இறால் வளர்ப்பிற்கு 60% மானியம் அறிவிப்பு, புதிய தொழில் தொடங்க 35% மானியத்துடன் கடன் பெற அழைப்பு, தொடர் கனமழையால் 15000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம், திருவள்ளூர் மாவட்டத்தில் வங்கி மேளா தொடங்கியது, ஆவின் தினத்தையொட்டி நுகர்வோருக்கு சலுகை, மாவட்ட அளவிலான க்ருஷி ஜந்த்ரபதி மேளா 2023, முருங்கைப் பூ தேன் உற்பத்தி மூலம் லட்சக்கணக்கல் வருமானம் ஈட்டும் பெண்கள் முதலான வேளாண் தகவல்களை இப்பதிவு வழங்குகிறது.
மேலும் படிக்க: விவசாயத்துக்கு ரூ.20 லட்சம் கோடி|தண்ணீர் பாய்ச்ச செயலி|பயிர் காப்பீடு|முத்ரா கடன்|புயல் எச்சரிக்கை
1. இறால் வளர்ப்பிற்கு 60% மானியம் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் இறால் உற்பத்தியினை அதிகரிக்கவும், புதியதாக இறால் பண்ணை தொழிலில் ஈடுபட விரும்வோர் பயன்பெறும் வகையில் உவர்நீர் இறால் வளர்ப்பிற்காக புதியகுளங்கள் அமைத்தல் மற்றும் உள்ளீடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. உவர்நீர் இறால் வளர்ப்பிற்காக புதிய குளங்கள் அமைத்தல் திட்டத்தில் 01 ஹெக்டேர் பரப்பிற்கு ஆகும் மொத்த செலவினம் ரூ.8 லட்சத்தில் பொது பிரிவினருக்கு 40% மானியமாக ரூ.3.20 லட்சமும் பெண்களுக்கு 60% மானியமாக ரூ.4.80 லட்சமும் வழங்கப்படும். இக்குளங்களுக்கு இறால் வளர்க்க உள்ளீடுகள் வழங்கும் திட்டத்தில் மொத்த செலவினம் ரூ.6 லட்சம் பொதுபிரிவினருக்கு 40% மானியமாக 2.40 லட்சமும், பெண்களுக்கு 60% மானியமாக ரூ.3.60 லட்சமும் வழங்கப்படும். தஞ்சாவூர் மாவட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் இறால் வளர்ப்பு விவசாயிகள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் எனக் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சம்பா நெல் சாகுபடிக்கு மானியம்|குறைந்த வட்டி கடன்|கிசான் கிரெடிட் கார்டு|ரயில்வேயில் வேலைவாய்ப்பு
2. புதிய தொழில் தொடங்க 35% மானியத்துடன் கடன் பெற அழைப்பு!
விருதுநகர் மாவட்ட தொழில் மையத்தில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டங்கள் மூலம் மானியம் பெற்று தொழில் தொடங்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார். வேலையில்லா திண்டாட்டத்தினைத் தணிப்பதற்காகத் தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்படும் சுயதொழில் கடனுதவி திட்டங்களை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தகுதிவாய்ந்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் உரிய முறையில் பயன்படுத்தி தொழில் முனைவோர்களாகத் திகழ்ந்திட வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு 35% மானியத்துடன் அதிகபட்சமாக ரூ.75 லட்சம் முதல் ரூ.5 கோடி வரையிலான கடனுதவி வழங்கப்படுகிறது. கடனுதவித் தொகையினை திரும்ப செலுத்திடும் தவணைத் தொகைகளில் விதிக்கப்படும் வட்டியில் 3 விழுக்காடு வட்டித் தொகையினை பின்னேற்பு மானியமாக அரசு வழங்கி வருகிறது. கடன் வரம்பிற்கு மேல் கடனுதவி தேவைப்படும் பட்சத்தில் குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. தொடர் கனமழையால் 15000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்
திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு நான்கு லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் இலங்கையை ஒட்டி காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலு பெற்றுள்ளதையடுத்து டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தற்பொழுது திருவாரூர் மாவட்டத்தில் நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக அறுவடைப்பணிகள் மிகப்பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் 15,000 ஏக்கர் அறுவடைக்கு தயாராக உள்ள நெல் பயிர்கள் கனமழையால் சாய்ந்துள்ளன.
4. திருவள்ளூர் மாவட்டத்தில் வங்கி மேளா
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 14 கலைஞர் திட்ட கிராமங்களில் வங்கிகள் மற்றும் வேளாண் சார்த்த அணைத்து துறைகளின் மூலம் "வங்கி மேளா"நடைபெற்றது. முதற்கட்டமாக வங்கித்துறையின்மூலம் ஜனவரி 12 அன்று 13 கிராமங்களில் வாங்கி மேளா நடத்தப்பட்டு விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியுள்ளவர்களுக்கு வாங்கிக்கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்டமாக 03.02.2023 அன்று வடமதுரை, சித்திராஜகண்டிகை, கூவம், மேலூர், கொடிவலசா, காட்டுப்பாக்கம், பட்டறைபெரும்புதூர், அம்மையார் குப்பம், ஞாயிறு, அலமேலுமங்காபுரம், வீரராகவபுரம், புட்லூர், வேப்பம்பட்டு மற்றும் வானகரம் ஆகிய 14 கிராமங்களில் பல விவசாயத்துறைகளின் பங்கேற்புடன் வங்கி மேளா நடைபெறவுள்ளது.
5. ஆவின் தினத்தையொட்டி நுகர்வோருக்கு சலுகை!
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையம் பிப்ரவரி. 1-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த தினம், ஒவ்வோர் ஆண்டும் ஆவின் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. ஆவின் தினத்தையொட்டி, இந்த மாதம் முழுவதும்பல்வேறு நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்படுகின்றன. மேலும், நுகர்வோர், விற்பனையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், ரூ.250-க்கு மேல் ஐஸ்கிரீம் வாங்கும் நுகர்வோருக்கு ரூ.10 பெறுமானமுள்ள ஐஸ்கிரீம், ரூ.500-க்கு மேல் ஐஸ்கிரீம் வாங்கும் நுகர்வோருக்கு ரூ.20 பெறுமானமுள்ள ஐஸ்கிரீம் இலவசமாக வழங்கப்படும். இந்த சலுகை சென்னையில் உள்ள ஆவின் பாலகங்களில் ஒரு மாதத்துக்கு வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
6. மாவட்ட அளவிலான க்ருஷி ஜந்த்ரபதி மேளா 2023!
மாவட்ட அளவிலான வேளாண் இயந்திர கண்காட்சி இன்று துவங்கியது. விவசாயிகளுக்கு மலிவு விலையில் விவசாய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை வழங்குவதே இக்கண்காட்சியின் நோக்கம் ஆகும். இன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் விவசாயக் கருவிகள் விவசாயத் துறையில் விவசாயிகளுக்கு எவ்வாறு உதவும் என்று விளக்கமளிக்கப்பட உள்ளது. இதில் பல்வேறு விவசாயிகள், விவசாயம் சார்ந்த நிறுவனர்கள் கலந்துகொண்டனர்.
7. தொடர்ந்து உச்சம் அடையும் தங்கத்தின் விலை! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
அமெரி்க்க பெடரல் வங்கி வட்டி வீதத்தை 25 புள்ளிகள் உயர்த்தியதால் முதலீடு பங்குப்பத்திரிங்கள் திரும்பும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதால் நேற்று தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்தது. இன்று விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் கிராமுக்கு 90 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 ரூபாய் உயர்ந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(வியாழக்கிழமை) கிராமுக்கு 90ரூபாய் உயர்ந்து ரூ.5,505ஆகவும், சவரனுக்கு 720 ரூபாய் அதிகரித்து ரூ.44 ஆயிரத்து 040 ஆக அதிகரித்துள்ளது.
8. முருங்கைப் பூ தேன் உற்பத்தி மூலம் லட்சக்கணக்கல் வருமானம் ஈட்டும் பெண்கள்
முருங்கை பூவில் இருந்து தேனீக்கள் எடுக்கும் தேனை பெட்டி வைத்து சேகரித்து பெண்கள் விற்பனை செய்து வருகின்றனர். ஒரு வருடத்திற்கு மூன்று மாதம் பெட்டியில் இருந்து தேன் சேகரிக்கின்றனர். ஒரு பெட்டியில் 7 லிட்டர் தேன் கிடைக்கிறது. ஒரு லிட்டர் தேன், 500 முதல் 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. முருங்கைப் பூ தேன் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சௌதி அரேபியா, துபாய், கத்தார், இந்தோனீசியா போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
9. திருநெல்வேலி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி 14 வரை கோழிக்கழிச்சல் தடுப்பு முகாம்
தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 01 முதல் 14 முடிய இரண்டு வாரங்கள் கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. கோழிக்கழிச்சல் நோய் என்பது கோழிகளை தாக்கும் ஒருவிதமான வைரஸ் நோய் ஆகும். இந்நோய் கண்ட கோழிகளில் இறப்பு நேறிடலாம். இந்த நோய்க்கு சிகிச்சை இல்லை. தடுப்பூசி போடுவதன் மூலம் தான் இந்த நோயைத் தடுக்க இயலும். இந்த தடுப்பூசி அனைத்து கால்நடைமருந்தகங்கள் மற்றும் கால்நடை கிளைநிலையங்களில் வாரவாரம் இடப்படுகிறது. வருடம் ஒருமுறை கிராமங்களில் நடப்படுகிறது. பொதுமக்கள் இந்த முகாமினை நல்லமுறையில் பயன்படுத்தி தங்கள் கோழிகளுக்குக் கோழிக்கழிச்சல் தடுப்பூசி இட்டு கோழிச்சல் நோயிலிருந்து தங்கள் கோழிகளைக் காப்பாற்றிப் பொருளாதார முன்னேற்றம் அடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்னு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் படிக்க
பனையேறும் கருவி கண்டுபிடிபவருக்கு விருது, திறனுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்