Farm Info

Friday, 01 July 2022 12:14 PM , by: Elavarse Sivakumar

தமிழகத்தில் ஆடிப்பட்டத்தில், தக்காளி, கத்தரி, வெண்டை ஆகிய காய்கறிகளின் விலை முன்னறிவிப்பை வேளாண் பல்கலை வெளியிட்டுள்ளது.விவசாயிகள் தங்கள் நடவு முடிவுகளை மேற்கொள்ள வேளாண்மைப் பல்கலை சார்பில், விலை முன்னறிவிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, தக்காளி, கத்திரி மற்றும் வெண்டை ஆகிய காய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாட்டின் மொத்த தக்காளி உற்பத்தியில், தமிழகம், ஏழு சதவீதம் பங்களிக்கிறது.நாட்டில் தக்காளி, 20 லட்சம் ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு, 203 லட்சம் டன் உற்பத்தியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

உற்பத்தி

கத்திரி, 18 லட்சம் ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு, 127.68 லட்சம் டன் உற்பத்தியாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. வெண்டை, 12.5 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டு, 64.16 லட்சம் டன் உற்பத்தி செய்யப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

என்னவிலை கிடைக்கும்?

ஒட்டன்சத்திரம் சந்தையில் கடந்த, 14 ஆண்டுகளாக நிலவிய விலைகள் ஆய்வு செய்யப்பட்டன. இதன்படி, அறுவடையின் போது தரமான தக்காளியின் பண்ணை விலை ரூ.20 - 23 வரையும், நல்ல தரமான கத்திரி கிலோவுக்கு ரூ. 25 - 27வரையும், மற்றும் வெண்டையின் பண்ணை விலை ரூ.15 -18, வரையும் இருக்கும் என தெரியவந்துள்ளது.எனவே, விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனைகளின் அடிப்படையில், விதைப்பு முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தொடர்புக்கு

இது குறித்த கூடுதல் விபரங்களுக்கு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,கோயம்புத்தூர்-641003 என்ற முகவரியிலும், 0422-2431405 என்ற தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க...

எரிவாயு சிலிண்டர் விலை ரூ.187 குறைந்தது!

7 டன் ரசாயன மாம்பழங்கள் - அதிரடி பறிமுதல்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)