1. விவசாய தகவல்கள்

தென்னையில் ஊடுபயிர் சாகுபடி- ரூ.10,500 மானியம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Intercropping of coconut - Rs. 10,500 subsidy!

கோவை மாவட்டம் உடுமலை வட்டத்தில், பருவமழை சீசனுக்காக, விவசாயிகளுக்குத்தேவையான, காய்கறி நாற்றுகள், அரசு பண்ணையில் தயாராகி வருகின்றன. இந்நிலையில், ஊடுபயிர் சாகுபடிக்கு மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குடிமங்கலம் வட்டார தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குடிமங்கலம் வட்டாரத்தில், பி.ஏ.பி., மற்றும் பருவமழை சீசனுக்கு தேவையான நாற்றுகள் மற்றும் தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை, வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து, குடிமங்கலம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மோகனரம்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

பருவமழை சீசனுக்கு, தேவையான காய்கறி நாற்றுகள், அரசு தோட்டக்கலை பண்ணையில், தயார் செய்யப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகி, பதிவு செய்து கொள்ளலாம்.

மானியம்

  • மேலும், இந்தாண்டு, புதிதாக தென்னையில், ஊடுபயிராக வாழை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு, 10 ஆயிரத்து 500 ரூபாய் மானியம் வழங்கப்படும்.

  • வாழையில், ஊடுபயிராக காய்கறி சாகுபடி செய்பவர்களுக்கு ஏக்கருக்கு, 4 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்பட உள்ளது.தக்காளி விவசாயிகளுக்கு, முட்டுக்கொடுக்கும் கட்டமைப்பு உருவாக்க மானிய திட்டம் செயல்படுத்தப்படும்.

  • கடந்தாண்டு, குடிமங்கலம் வட்டாரத்தில், தோட்டக்கலைத்துறையின் பல்வேறு மானியத்திட்டங்களில், 1,573 விவசாயிகள் பயன்பெற்றுள்ளார்கள்.

தொடர்புக்கு

தேசிய தோட்டக்கலை இயக்கத்திட்டத்தின் கீழ், 34.66 லட்சம் ரூபாய்க்கு மானியத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.தோட்டக்கலைத்துறை மானிய திட்டங்களில், பயன்பெற விரும்பும் விவசாயிகள், உதவி இயக்குனர் மோகனரம்யா - 94861 48557, தோட்டக்கலை அலுவலர் பிரியங்கா - 98650 75473, உதவி தோட்டக்கலை அலுவலர்கள், சித்தேஸ்வரன் - 88836 10449, கனகராஜ் - 99762 67323, சங்கவி 81110 55320 ஆகிய மொபைல் எண்களில், தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

தங்கப் பத்திரம் விற்பனை- தள்ளுபடி விலையில் தங்கம்!

Whats-appல் கூட கடன் பெற முடியும்- அதுவும் 30 நொடிகளில்!

English Summary: Intercropping of coconut - Rs. 10,500 subsidy! Published on: 24 June 2022, 07:07 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.