திருச்சி மாவட்டம் துறையூருக்கு அருகில் இருக்கும் சிறுநாவலூர் கிராமத்தில் 20 ஆண்டுகளாகப் பாக்குச் சாகுபடி செய்து வருகின்ற விவசாயி பாக்குச் சாகுபடி குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூருக்கு அருகில் இருக்கும் சிறுநாவலூர் என்னும் கிராமத்தில் விவசாயி ராஜ்குமார் அவர்கள் 20 ஆண்டுகளாக 3 ஏக்கரில் 3000 பாக்கு மரங்கள் வளர்த்துப் பாக்குச் சாகுபடி செய்து வருகின்றார். இவர் 20 ஆண்டுகளாக 3 ஏக்கரில் சுமார் 3000 பாக்கு மரங்கள் வளர்த்துப் பாக்குச் சாகுபடி செய்து வருகின்றார். செயற்கை உரங்களைப் பயன்படுத்தாமல் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி விவசாயம் செய்வதாக விவசாயி கூறியுள்ளார்.
பாக்கு மரம் வளர நிழல் அவசியமானது. அதனால், வாழை போன்ற பயிர்களை ஊடுபயிராக இடையில் நட்டு நிழல் கொடுத்து வளர்கலாம் எனவும், பாக்கு மரம் 3 வருடங்களுக்கு நன்கு வளர்ந்த பின்பு, வாழை சாகுபடி செய்யப்பட்டு, பாக்கு மரம் தொடர்ந்து வளர்க்கப்பட்டு வருகிறது எனவும் கூறுகிறார்.
நீர் பாய்ச்சல் என்று பார்த்தால் நவம்பர் – பிப்ரவரி மாதங்களில் வாரம் ஒரு முறையும், மார்ச் – மே மாதங்களில் நான்கு நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்ச வேண்டும். பாக்கு மரச்செடிகளை நட்ட 5 ஆண்டுகளில் பாக்கு மரம் காய்க்கும் நிலைக்கு வரும். வருடத்தில் மூன்று முதல் ஐந்து முறை அறுவடை செய்யலாம் எனக் கூறப்படுகிறது. மரம் மிகவும் மெலிதாக இருப்பதால், பகல் 2 மணிக்குமேல் அடிமரத்தில் வெயில் பட வாய்ப்பு இருக்கிறது. வெயில் பட்டால், மரம் வெடித்துவிடும் அபாயம் உண்டு அவற்றைப் பாதுகாக்க, பாக்கு மட்டைகளைப் பயன்படுத்துவதாகக் கூறுகின்றனர். இதில் லாபம் என்று பார்த்தால் அந்தந்த சீசன் பொறுத்து தான் அமையும் என்று கூறுகிறார் விவசாயி ராஜ்குமார்.
30 வருடங்களுக்கு மேல் பாக்குச் சாகுபடி பயன் அளிக்கிறது. தென்னைக்கு மாற்றாக விவசாயிகள் பரவலாகப் பாக்கு மரங்களைச் சாகுபடி செய்து வருகின்றனர். பாக்கு மரம் பொதுவாக மலைத் தோட்டப் பயிராகும். நமது தமிழ்நாட்டில் கோவை, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, தேனி, மதுரை முதலான பல மாவட்டப் பகுதிகளில் பயிரிடப்படுகின்றன. மற்ற பிற இடங்களில் பெரும்பாலான இடங்களில் பயிரிடப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க
நாடு கடந்து செல்லும் நீரா பானம்: திருப்பூரில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி!