மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 14 September, 2021 3:55 PM IST
Profitable Fruit and Vegetable Business!

நீங்கள் ஒரு பழம் மற்றும் காய்கறி வியாபாரத்தை தொடங்கி நல்ல பணம் சம்பாதிக்கலாம் என்று நினைக்கிறீர்கள் என்றால் கீழே படியுங்கள். உங்களுக்காக 2021 ஆம் ஆண்டின் பழம் மற்றும் காய்கறி குறித்த சிறந்த வணிக யோசனைகளைத் தொகுத்துள்ளோம். 

அதிக லாபம் தரும் பழம் மற்றும் காய்கறி வணிக யோசனைகள்

குறுகிய காலத்தில் உங்களுக்கு நல்ல லாபம் தரக்கூடிய சிறந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் வணிக யோசனைகளின் பட்டியல் இங்கே,

காய்கறி மற்றும் பழ விநியோகம்

நீங்கள் உங்கள் வீட்டில் காய்கறிகள் மற்றும் பழங்களை வளர்த்துக்கொண்டிருந்தால் காய்கறிகளை வீட்டுக்கு வீடு டெலிவரி செய்ய ஆரம்பிக்கலாம். உங்கள் சுற்றுப்புறத்தில் இருக்கும் நம்பர்களுக்கு வழங்கி, மிகச் சிறிய அளவில் தொடங்கலாம். இருப்பினும், நீங்கள் லாபம் சம்பாதிக்கத் தொடங்குகையில், உங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்தி, அரசாங்கத்திடம் பதிவு செய்து, மற்ற இடங்களுக்கு எடுத்துச் செல்லலாம்.

வாழை சிப்ஸ் வர்த்தகம்

 வாழை சிப்ஸ் வணிகம் தொடங்குவது எளிதானது.நீங்கள் பெரியதாக முதலீடு செய்யவேண்டும் என்று அவசியமில்லை. உங்கள் வியாபாரம் வெற்றிபெறவில்லை என்றால் நம்பிக்கையை இழக்காதீர்கள், வெற்றி பெற்றால் உங்கள் சொந்த பிராண்டை உருவாக்குவதற்கு நீங்கள் உள்நாட்டில் விற்பதில் இருந்து வெளிநாடுகளில் வர்த்தகம் செய்ய தொடங்கலாம்.

பப்பாளி விவசாயம்

வெறும் பத்து பப்பாளி மரங்கள் உங்களுக்கு மாதம் 15,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். நிச்சயமாக, பப்பாளி விவசாயம் அங்குள்ள அனைத்து முதலீட்டாளர்களுக்கும் சிறந்தது.

நறுக்கப்பட்ட மற்றும் பேக் செய்யப்பட்ட காய்கறி வணிகம்

காய்கறிகளை நறுக்குவது மிகவும் கடுமையான பணியாக மக்கள் கருதுகிறார்கள், குறிப்பாக நகரங்களில் வாழும் மக்களுக்கு இது கடினமாக இருக்கிறது. நீங்கள் நகர்ப்புறத்தில் வசிக்கிறீர்கள் என்றால் பெரிய அளவில் நறுக்கப்பட்ட மற்றும் பேக் செய்யப்பட்ட காய்கறிகளை விற்கும் வணிகத்தை தொடங்கலாம்.

நீங்கள் உண்மையில் சுகாதாரம் மற்றும் பேக்கிங் ஆகியவற்றைக் கவனித்து உங்கள் தயாரிப்புகளை நன்கு சந்தைப்படுத்த வேண்டும், இதனால் அவை பிரபலமடையும்.

ஊறுகாய் வியாபாரம்

ஊறுகாய் வியாபாரம் மிகவும் நன்மை பயக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. நீங்கள் முள்ளங்கி ஊறுகாய், மாங்காய் ஊறுகாய், மிளகாய் ஊறுகாய், கேரட் ஊறுகாய் என்று ஆரம்பிக்கலாம், பின்னர் மீன் ஊறுகாய் போன்ற இறைச்சி ஊறுகாய்கள் செய்து உங்களது வருமானத்தை விரிவாக்கலாம். நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊறுகாய் வணிகம் செய்யலாம்.

மொட்டைமாடி காய்கறி பண்ணை

தோட்டம் அமைக்க உங்களுக்கு போதுமான நிலம் இல்லையென்றால், உங்கள் வீடு மாடியில் கூட காய்கறிகளை வளர்க்கத் தொடங்கலாம். உங்கள் வீட்டு மாடியில் பல வகையான காய்கறிகளை வளர்க்கலாம், இதில் அனைத்து வகையான கொடிகள், பீன்ஸ், பீட்ரூட், மிளகாய், தக்காளி, முலாம்பழம் மற்றும் உருளைக்கிழங்குகளை கூட தோட்டத்தில் வளர்க்கலாம்.

மேலும் படிக்க..

பசுமைக்குடில் காய்கறிகளை தாக்கும் நூற்புழுக்கள்: கட்டுப்படுத்தும் முறை

English Summary: Profitable Fruit and Vegetable Business!
Published on: 14 September 2021, 03:55 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now